டார்க் ஜெயன்ட் விமர்சனம்

மதன் கடுமையான பண நெருக்கடியில் தவிக்கும் போது தனது வயலில் கண்டெடுத்த ஒரு விசித்திரமான மர்மச் சிலையிடம் தன் வறுமையை பகிர்ந்து கொள்ள அது தனது அமானுஷ்ய சக்தியால் நெல்லையும் தங்க நாணயத்தையும் வழங்குகிறது மதன் பேராசையால் மேலும் மேலும் செல்வம் கேட்க அதற்கு விலையாக அந்தச் சிலை மனித பலியைக் கேட்க அங்கிருந்து அந்த வம்சத்தின் சாபம் தொடங்குகிறது இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தற்காலத்தில் சென்னையில் கடுமையான கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஆதார்ஷ் தன் பூர்வீக கிராமத்திலிருக்கும் பெரிய பாரம்பரிய வீட்டை விற்று கடனை அடைக்கத் தன் மனைவி ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் தங்கை கீர்த்தி ஆகியோருடன் அங்கு வர அவர்கள் அந்தப் பாழடைந்த வீட்டிற்குள் நுழைந்தது முதலே பல அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதோடு இவர்களது ஒட்டுமொத்த வம்சமும் ஒரு இருண்ட அமானுஷ்ய சக்திக்கு பலியானது ஆதார்ஷ்க்குத் தெரியவர பேராசையாலும் குற்ற உணர்வாலும் செய்த பழைய தவறுகள் அவர்களைத் துரத்தும் வேளையில் இரண்டாம் பாதியில் வரும் சோனியா அகர்வால் இந்த இருண்ட ரகசியங்களின் பின்னணியை உடைக்கிறார் இறுதியில் இந்தக் குடும்பம் அந்த அமானுஷ்ய சக்தியின் சாபத்திலிருந்து தப்பித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆதார்ஷ் மதிகாந்த் தன் குடும்பத்தின் ரகசியங்கள் அறியும் போது ஏற்படும் பயத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
ஜோவிதா லிவிங்ஸ்டன் பயத்தையும், பதற்றத்தையும் தத்ரூபமாக தன் நடிப்பில் வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் சோனியா அகர்வால்,அயலி மதன்,இயக்குநர் கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன்,அமுதவாணன்,கீர்த்தி,விஜய், ரஃபிக் பாட்சா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜாவின் இசையும்,ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
மனிதனின் பேராசை எப்படி ஒரு வம்சத்தையே அழிக்கிறது என்ற ஒரு ஆழமான உளவியல் கதையை கையில் எடுத்து இரண்டு வேறுபட்ட காலகட்டக் கதைகளாக சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் கே.எஸ். கிஷன் அவர்களுக்கு பாராட்டுகள்.
டார்க் ஜெயன்ட் அருமையான அமானுஷ்ய ஒரு உளவியல் ஹாரர் த்ரில்லர்.