‘எங்கள் தங்கம்’ விமர்சனம்

ஆதரவற்ற இல்லத்தில் வளர்த்து வரும் சமந்தா,கௌதமி,ஆனந்த் தம்பதிகளின் மூத்த மகனான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 3 வருடங்களுக்குப் பிறகு கணவரின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார்.
பாரம்பரிய மிக்க அவரது குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள்  அனைவரின் அன்பை பெறுவதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக்  கொள்கிறார். இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா அடியாள் ஒருவனை அனுப்பி சமந்தா குறித்து விசாரித்து வர சொல்கிறார்.விசாரிக்க சென்றவன் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறான் இதனையடுத்து சிறையில் இருந்து தப்பிக்கும் குல்ஷன் சமந்தாவை நேரில் சந்தித்து தன்னுடன் வந்துவிடு இல்லாவிட்டால் உனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று கூறுகிறான்.
இதனால் சமந்தா தான் யார் என்ற உண்மையை குடும்பத்தில் கூறினாரா இல்லையா குடும்பத்தை காப்பாற்ற சமந்தா எடுத்த முடிவு என்ன கணவரின் தங்கை திருமணம் நடந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஸ்வர்ணம் கதாபாத்திரத்தில் அமைதியாக அறிமுகமாகும் சமந்தா தனது  குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஜான்சியாக அதிரடி காட்டியிருக்கிறார். அனைவரின் அன்பை பெறுவதக்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக இவர் தோழியுடன் சேர்ந்து செய்யும் ரகளைகள் சிரிக்க முடிகிறது. படத்தின் இறுதி காட்சிகளில் காட்டும் ஆக்ஷன் மூலம் நான் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறுவது போல இருக்கிறது.
மற்றும்திகந்த்மஞ்சாலே,கௌதமி,ஆனந்த், ஸ்ரீலக்‌ஷ்மி,குல்ஷன் தேவய்யா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையும்,ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஆதரவற்ற பெண் கூட்டுக குடும்பத்தில் இடம் பிடிப்பதை மைய கருவாக வைத்து சிறந்த திரைக்கதை அமைத்து இத்திரைப்படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி அவர்களுக்கு பாராட்டுகள்.
‘எங்கள் தங்கம்’ ஆதரவற்ற பெண்களுக்கான கதை.