நாயகன் சனந்த் ஜெய்ப்பூர் நகரில் தன் நண்பருடன் ஹோட்டல் நடத்துகிறார்.அந்த ஹோட்டலுக்கு தனது தோழியுடன் சாப்பிட வருகிறார் இமயா.அப்போது சனந்த்துக்கும் இமயாவுக்கும் நட்பு மலர்கிறது ஒரு சமயம் இருவரும் தனிமையில் சந்திக்கும்போது இமயா தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் சனந்த் அந்த காதலை ஏற்க மறுக்கிறார்.ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வி அடைந்த நிலையில் காதல் மீது சனந்துக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம் இந்நிலையில் சனந்த் விபத்தில் சிக்க அவருக்கு சில வருட நினைவுகள் மறந்து விடுகிறது.ஏற்கனவே காதலித்த பெண்ணை காதலிப்பதாக அவர் எண்ணிக் கொண்டு செயல்படுகிறார். சனந்த் உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால் பழைய காதலி வந்தால் தான் முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் சனந்த் கதி என்னவாகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹீரோ சனந்த் சராசரி ஒரு இளைஞன் தோற்றத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
மடோனா செபாஸ்டின் சனந்த்தின் காதல் பிளாஷ் பேக்கில் வருகிறார் இளமை துள்ளுடன வலம் வருகிறார்.
மற்றும் இமயா டி,வாட்ஸப் மணி,டெப்னிதா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ராஜேஷ் முருகேசன் இசையும்,முகேஷ்வரன் வி ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
மாறுபட்ட கதையை கையில் எடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் கிஷோர் குமார் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஹார்ட்டின் 90 ஸ் காதலின் ஞாபகம்.
