நாயகன் அயான் கே அவரது ஊரான குபேரபுரம் எனும் இடத்தில் தங்கம் இருக்கிறது என தெரியவந்து அங்கு வருகிறார். இந்த தங்கம் இருக்கும் விஷயத்தை ஏற்கனவே அறிந்த ஷாலினி கொண்டெபுடியும் அவரது அப்பாவும் வெளிநாட்டு வியாபாரி ஒருவருக்கு அந்நிலத்தை பல கோடி ரூபாய்க்கு விற்க நினைக்கிறார்கள்.இதே சமயம் சிறையில் இருந்து வெளியே வந்து அங்கே வரும் மற்றொரு உரிமையாளரான நாயகன் அயான் கே நிலத்தின் உண்மையான உரிமையாளர் என்பதால் விற்பதில் பாதி பங்கு கேட்கிறார்.அந்த பகுதியில் உள்ள நிலத்தில் ஒரேயொரு மரம் மட்டுமே இருக்கிறது. அந்த மரத்தை வெட்டிவிட்டு தோண்டினால் தங்கம் கிடைக்கும் என முடிவெடுக்கிறார்கள்.ஆனால் நாயகி அஹல்யா அந்த ஒற்றை மரத்தை தாய்போல நினைப்பததால் அதை வெட்ட கூடாது என்று போராடுகிறார்.நாயகியின் போராட்டத்தை மீறி மரம் வெட்டப்படுகிறது. அதன்பிறகு ஊரிலுள்ள அனைவரும் பேசுவதற்கு பதில் பாடுகிறார்கள். அவர்களால் பேசவே முடிவதில்லை.ஊரை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.இறுதியில் குபேரபுரம் மக்கள் சாபத்தில் இருந்து மீண்டு வந்தார்களா இல்லையா மக்கள் ஊரை விட்டு வெளியே சென்றார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அயான் கலகலப்பாக இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
கெளரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ துறுதுறுவென நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தை பெறுகிறார்.
மற்றும் ஷாலினி கொண்டேபூடி,நிவேதா பெத்துராஜ்,ராகுல் ரவீந்திரன்,சிறப்பு தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையும்,அங்கூர்.சி ஒளிப்பதிவும் கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.
மரங்கள் இயற்கை வளங்கள்,மக்களை பாதுகாப்பது ஆகியவற்றை மைய கருவாக கையில் எடுத்து சிறந்த திரைக்கதையை தனக்குரிய பாணியில் உருவாகியிருக்கும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
‘சிங் கீதம்’இயற்கை வளங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்கும் படம்.
