நாயகன் அர்ஜுன் தாஸ் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்க அதை திருப்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் இவர் மின்சாரத்திற்கு பணம் செலுத்த வருபர்களிடம் போலியான ரசீதியை கொடுத்து மோசடி செய்கிறார்.
மறுபுறம் லீசுக்கு வீட்டை எடுக்கும் கர்ப்பிணியான அன்னா பென் சில நாட்களிலேயே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்கிறார். இதனையடுத்து இதை போலவே இவரும் பலரிடம் லீஸ் மற்றும் வாடகைக்கு வீட்டை விடுவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்கிறார்.இதே சமயம் வடிவுக்கரசியின் மகனான யோகிபாபு அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் தேவைப்பட பலரிடம் கேட்டும் யாரும் பணம் கொடுக்க முன் வராததால் டிரஸ்ட் ஒன்றை நடத்துவதாக கூறி பல லட்ச ரூபாயை ஏமாற்றி மோசடி செய்கிறார்கள்.
இதனையடுத்து அன்னா பென்,யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் மோசடி செய்து சேர்த்து வைத்த பணத்தை அர்ஜுன் தாஸிடம் கொடுக்கிறார்கள்.அர்ஜுன் தாஸின் நண்பருக்கு அவசர தேவை என்பதற்காக 10 கோடி ரூபாயை கொடுக்க அவரது நண்பர் திடீர் என கொலை செய்யப்படுகிறார்.
இதனையடுத்து அர்ஜுன்தாஸ்,அன்னா பென்,யோகி பாபு,வடிவுக்கரசி ஆகியோரை போலீஸ் கைது செய்ய அவர்களிடம் இருந்து அவர்கள் தப்பி மங்களூர் செல்கிறார்கள்.அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.இதே சமயம் அன்னா பென்னின் மகனை யாரோ ஒருவர் பள்ளியில் இருந்து கடத்தி செல்கிறார்.
இறுதியில் குழந்தையை கடத்தியது யார் எதற்காக அன்னா பென் குழந்தையை அர்ஜுன் தாஸ் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
சரவணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன்தாஸ் வழக்கமான தனது இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார்.
மித்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென் எதிர்த்த நடிப்பபை கொடுத்துநடித்திருக்கிறார்.
மற்றும் யோகி பாபு,வடிவுக்கரசி, நந்தகோபால்,VTV கணேஷ்
சிறுவன் அகிலன்,ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையும்,அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் கதைக்கு பக்க பலமாக உள்ளது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதை மைய கருவாக வைத்து சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.
‘கான் சிட்டி ’ இன்றைய காலகட்டத்திற்கான கதை.
