” ஃபீல் மை லவ் ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரித்திருக்கும் படம் ” Feel My Love ” ஃபீல் மை லவ் ”

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.

ஹவுஸ் மேட்ஸ்’ (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்துவருகிறார்.

திறமையான இசையமைப்பாளர்களான ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

லவ்’ (LOVE), ‘கொலை சேவல்’ (Kolai Seval) போன்ற படங்கள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விளம்பரப் படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

ஹரி பிரகாஷ் எம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ள இப்படதின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது எக்ஸ் ( X )தளத்தில் வெளியிட்டுள்ளார். காதல், இளமை ததும்பும் இந்த போஸ்டர் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.