அன்பே டயானா’   விமர்சனம்


சேத்தன்–ரோஜா தம்பதியினர் ஈரமாவு வியாபாரம் செய்து வருகின்றனர் தனது கடின உழைப்பாலும் கண்டிப்பான குணத்தாலும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியவர் ரோஜா. குடும்பத்தின் அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார்.ஆனால் அவரது கணவர் சேத்தன் அதற்கு நேர்மாறானவர். குடிப்பழக்கம் கொண்டவர் மனைவிக்குப் பயந்து பயந்து வாழ்பவர்.இளமையில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன ஏக்கம் இன்னும் சேத்தனின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.அதனால் ரோஜாவை விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையை ஒரு கடமையாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகள் இஸ்மத் பானு திருமணமாகி கணவரைப் பிரிந்து தனது பெண் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார்.இரண்டாவது மகனான பாரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகன் சுதர்சன் படிப்பை முடித்து அரசுப் பணியில் இருக்கிறார்.இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் ஆங்கிலோ-இந்தியப் பெண்ணான ரம்யாவை பாரி மனதாரக் காதலிக்கிறார்.ரம்யாவின் வீட்டிலும் இந்தக் காதலுக்கு முழு சம்மதம் கிடைக்கிறது. ஆனால் தனது தாயின் கண்டிப்பான குணத்தையும் சாதி பற்றிய பிடிவாதத்தையும் நன்கு அறிந்த பாரி தனது காதலை வீட்டில் சொல்லத் தயங்குகிறார்.தனது இளமைக் காதல் நிறைவேறாத வேதனையை மனதில் சுமந்து வாழும் சேத்தன் மட்டும் மகனின் காதலுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறார். அதே நேரத்தில் வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த இருவரின் வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி அமையும் என்ற குழப்பமும் பாரியின் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் தனது தம்பி செல்வமுருகனின் மகளை பாரிக்குத் திருமணம் செய்து வைக்க ரோஜா முடிவு செய்கிறார். குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராகச் செயல் பட முடியாமல் பாரியும் திருமண மேடையில் அமர்கிறார்.இறுதியில் பாரியின் திருமணம் நடந்ததா பாரி,ரம்யா காதல் வெற்றி பெற்றதா தனது வாழ்வில் தவறவிட்ட காதலை மகனின் வாழ்க்கையில் சேத்தனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
ஆங்கிலோ-இந்தியப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன் சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் சேத்தன்,ரோஜா செல்வமணி,பரிதாபங்கள் கோபி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
பரத்சங்கர் இசையும்,ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரின் காதலையும், அவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் மையமாக கையில் எடுத்துசாதி மத எல்லைகளைக் கடந்து காதல் பாசம் குடும்பம் நட்பு உறவு மற்றும் நகைச்சுவை ஆகிய அனைத்தையும் அழகாகக் கலந்து சிறந்த திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் பாரி இளவழகன் அவர்களுக்கு பாராட்டுகள்.
அன்பே டயானா அன்ப,பாசம் நிறைந்தது.