ஒன் மேன்(One Man) விமர்சனம்

எல்லாத்துறையிலும் தனித்திறமை கொண்டு விளங்கும் ஐந்து நபர்களை தேர்வு செய்து அந்த ஐந்து நபர்களுக்கும் விருது அறிவிக்கப்பட அதனை பெற்று வர ஐந்து பேரும் ஒரே காரில் செல்கிறார்கள்.கார் பழுதடைவதால் அதை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு ஐந்து பேரும் செல்கிறார்கள் அங்கே ஒரு பெரிய சோதனை கூடத்தை பார்க்கிறார்கள்.அங்கு கிடைக்கும் ஒரு செல்போனை எடுத்து ஆன் செய்யும்போது அதில் அரைகுறையாக சோதனை செய்யாமல் விடப்பட்டதை சோதனை செய்து பார்த்தால் அதில் இந்த உலகில் 10 நாட்களுக்கு வேறு எந்த உயிரினமும் இருக்காது இங்கிருக்கும் ஐந்து பேர் மட்டுமே உயிரோடு இருக்கலாம் என்று தகவல் கிடைக்க அதை பரிசோதனை செய்ய முயல்கிறார்கள் அதன்பிறகு எதிர்பார்க்காத அற்புதமும் விபரீதமும் சம்பவங்களும் நடப்பதே மீதிக்கதை.
இப்படி கூட ஒரே நபரால் இல்ல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்ற கேள்வி எல்லோருக்குமே எழும் இந்த நபர் மனிதர் தானா அல்லது ரோபோவா என்ற சந்தேகம் கூட வரும் இதுவரை ஒரு படம் என்றால் ஒரு ஹீரோ ஹீரோயின் வில்லன் இன்னும் சில கதாபாத்திரங்கள் இணைந்து நடிப்பார்கள் அல்லது இருவர் மட்டுமே நடித்த படம் வந்திருக்கிறது ஆனால் ஒரே நபர் படத்தின் அத்தனை பணியும் செய்து சொல்ல போனால் நடிப்பு முதல் இயக்கம் வரை உள்ளடக்கிய எடிட்டிங் மேக்கப் சவுண்ட் பின்னணி இசை மிக்சிங் கிராபிக்ஸ் ஒளிப்பதிவு அரங்கம் உள்ளிட்ட 24 வகை துறைகளையும் கையில் எடுத்து படத்தை செய்து முடித்து உலகிலேயே முதன் முறையாக ஒரே நபர் எல்லா பணிகளையும் ஏற்று நடித்து இயக்கியுள்ள படம் என்ற பெருமையை ஒன் மேன் படம் பெற்றிருக்கிறது.ஒரே நடிகர் இரட்டை வேடத்தில் அல்லது மூன்று வேடத்தில் நடித்தால் அதுவே ஆச்சரியத்தில் ரசிகர்களை ஆழ்த்தி விடும் ஆனால் இந்த படத்தில் நூற்றுக்கணக்கான கதாபாத்திரத்தில் ஒரே நடிகர் ஒரே சமயத்தில் ஒரே பிரேமுக்குள் நடித்திருப்பது யாராலும் எண்ணிப் பார்க்க முடியாத ஆச்சரியம்.இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக இசையமைப்பாளராக என ஒரே நபர் பொறுப்பேற்று செய்த சங்ககிரி ராஜ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள்.சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான பணி ஐந்து வருடங்களை எடுத்துக் கொண்டாலும் தொழில்நுட்ப பணிகளை எல்லாம் அவர் ஒருவரே செய்வதை மேக்கிங் வீடியோவில் பார்க்கும் போது அரங்கில் இருப்பவர்களை நிச்சயம் கைதட்டி பாராட்ட வைக்கும்.
ஒன் மேன் அனைவரும் பார்க்க வேண்டிய பாராட்ட வேண்டிய படம்.