*ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு*
‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா… அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர்
நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் தயாராகி வரும் ‘கிங் 100- KING100’ திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன்எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது. அத்துடன் ர.கார்த்திக் நாகார்ஜுனா கூட்டணி மிகப் பெரும் சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
படைப்பாளுமை மிக்க இயக்குநர் ரா. கார்த்தியின் கற்பனையில் உருவான ‘கிங் 100 – KING 100’ படத்தின் பிரத்யேக காணொளியில்.. நாகார்ஜுனாவின் திரை தோற்றம்- திரை ஆளுமை – திரை பங்களிப்பு – என அனைத்து அம்சங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருப்பதால், நாகார்ஜுனாவின் ரசிகர்கள் இதனை பிறந்தநாள் பரிசாக கொண்டாடி, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இயக்குநர் ர. கார்த்திக், நாகார்ஜுனாவிற்காக அதிலும் அவருடைய நூறாவது திரைப்படத்திற்காக உருவாக்கி இருக்கும் காட்சி அமைப்புகள்- உரையாடல்கள்- அனைத்தும் பிரம்மாண்டமானதாகவும், ரசிகர்களுக்கு பிரமிக்கத்தக்க வகையிலான திரையரங்க அனுபவத்தை வழங்குவதாலும். இதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்று இருக்கிறார்கள்.
நடிகர்,:
நாகார்ஜுனா
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : ர.கார்த்திக்
தயாரிப்பு நிறுவனம் : அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர் : அக்கினேனி குடும்பம்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ராஜா மகாதேவன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : என். சதீஸ் குமார்
படத்தொகுப்பு : நவீன் நூலி
கிரியேட்டிவ் புரொடியுசர்: பிரசாத் நிம்மகாயலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
