பெத்தலகேம் குடும்ப யூனிட்”விமர்சனம்

நாயகன் நிவின் பாலி தனது காதலி இறந்துபோனதால் திருமணமே வேண்டாம் என்று சொல்லி 42 வயதுவரை தனியாக வாழ்ந்து வருகிறார்.அவர் வசிக்கும் வீட்டுக்கருகில் 22 வயதான மமிதா பைஜூ ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் குடியேறுகிறார். 20 வயது வித்தியாசத்தையும் மீறி இருவரும் காதலிக்கிறார்கள். இதை அறிந்த மமிதா பைஜியின் பெற்றோர்கள் அவரை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
தாயகம் திரும்பி வந்த மமிதா பைஜீ தன்னைவிட வயது முதிர்ந்த நிவின் பாலியை திருமணம் செய்து கொண்டாரா இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
நிவின் பாலி தனது அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
மமிதா பைஜியின் துடிப்பான கல்லூரிப் பெண்ணாக மிக இயல்பாகத் திரையில் பிரதிபலித்துள்ளார்.
மற்றும் சங்கீத் பிரதாப்,பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா,வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா,ஷமீர் கான்,மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம்,தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவும்,விஷ்ணு விஜயின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
இப்படி ஒரு சிறந்த கருவை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் கிரிஷ் எ.டி அவர்களுக்கு பாராட்டுகள்.
பெத்தலகேம் குடும்ப யூனிட் அன்பின் அடையாளம்.