“மண்டாடி” விமர்சனம்

நாயகன் சூரியின் முகவை அணியும், சுகாசின் சுனாமி அணியும் கடலில் பாய்மரக்கப்பல் போட்டியில் மோதுகிறது.போட்டியின் விதிப்படி கடலில் 8 மைல் தூரத்திற்கு சென்று ஒரு குறிப்பிட்ட எல்லையை சுற்றி திரும்ப கரைக்கு வந்துசேர வேண்டும்.முதலில் வருபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அவருக்கு அந்த கிராமக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.இதுதான் விதிமுறை. இதற்குமுன் இதே கிராமத்தில் சத்தியராஜ் நடத்திவந்த “மண்டாடி” அணியில்தான் இப்போது எதிரிகளாக இருக்கின்ற சூரியும் சுகாசும் நண்பர்களாக இருந்தவர்கள். பிற்காலத்தில் இவ்விருவர்களும் எதிரிகளாக மாறிவிட்டார்கள்.அது ஏன் என்பதுதான் மீதிக்கதை.
சூரியின் கடின உழைப்பு திரையில் நன்கு தெரிகிறது.சூரி சிறப்பாக நடித்து உச்சத்தை தொட்டிருக்கிறார்.
மற்றும் மகிமா நம்பியார்,சத்யராஜ்,சுகாஸ், பாலசரவணன் ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும்,ஜி.வி.பிரகாசின் இசையும் கதைக்கு பலம்.
பழைய கதை என்றாலும் அதை புதிய பாணியில் சிறந்த திரைக்கதை அமைத்து சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி அவர்களுக்கு பாராட்டுகள்.
“மண்டாடி”சூரிக்கு ஒரு மைல் கல்.