நேர்மையான மருத்துவரான குருசோமசுந்தரம் அவரது மனைவி அனுமோலுடன் வாழ்ந்து வருகிறார்.அவரது மகள் அர்ச்சனா வெளிநாட்டில் இருக்கிறார்.அங்கேயே அவரது காதலர் விஜய்விஷ்வாவும் இருக்கிறார்.தாய் தந்தை மீது மிகவும் பாசம் கொண்ட அர்ச்சனா வெளிநாட்டிலிருந்து தனது தந்தை குருசோமசுந்தரத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கிறார். பிறகு போனை அம்மாவிடம் கொடுக்க சொல்கிறாள்.அதற்கு குருசோமசுந்தரம் அம்மா இப்போது வீட்டில் இல்லை. என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு அவளது அம்மா வீட்டுக்கு போய்விட்டாள் என்று கூறுகிறார்.அம்மா அனுமோலை சமாதானப்படுத்தி மீண்டும் அப்பாவுடன் ஒன்று சேர்க்க தன் காதலன் விஜய் விஷ்வாவுடன் சென்னைக்கு இருவரும் வருகிறார்கள்.எதற்காக குருசோமசுந்தரமும் அனுமோலும் பிரிந்தார்கள்.மகள் அர்ச்சனாவின் முயற்சியால் குருசோமசுந்தரமும் அனுமோலும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.
குருசோமசுந்தரம் தனக்கே உரித்தான அமைதியான குணத்துடன் ஒரு மருத்துவராகவே திரையில் வாழ்ந்திருக்கிறார்.
அனுமோல் தனது சிறந்த நடிப்பால் ஸ்கோர் செய்துள்ளார்.ஆணவக் கொலைக்கு எதிராகவும்,அரசியல்வாதிகளின் அச்சுறுத்துதல்களுக்கு அடிபணியாமல் திரையில் வலம் வந்துள்ளார்.
மற்றும் விஜய் விஷ்வா,அர்ச்சனா குமார், சாய் விக்கி,நயனா சாய்,பிபின் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இசையமைப்பாளர் கே வின் இசையும்,சத்தேஷின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
இப்படி ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து சிறந்த குடும்ப பிண்ணனி பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் சராஜ்சீலன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“பாரீஸ் கபே”ஒரு அழகான சமுதாய விழிப்புணர்வு.
