“மீசையை முறுக்கு 2” விமர்சனம்

நாயகன் ஆதி மிகப்பெரிய தனியிசைக் கலைஞனாகும் ஆசையுடன் முயற்சித்து வரும் நிலையில் கெடிகா சர்மாவை சந்திக்கிறார்.அவர் மீது ஆதிக்கு காதல் ஏற்பட இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் இசையமைப்பாளருடன் மோதல் உண்டாகிறது.பணம்,புகழ்,பரம்பரை பலம் கொண்ட இசையமைப்பாளருடன் மோதும் அவர் தனது கனவை அடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை கதை.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும்,இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார் ஆதி.
கெடிகா சர்மாவின் நடிப்பு வழக்கமான கவர்ச்சி இளைஞர்களை ஈர்க்கும் காந்தம்.
மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர்,கருணாஸ், யோகிபாபு,நாசர்,பகவதி,விஜய் வரதராஜ், ஹர்ஸத் கான் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு கதைக்கு கூடுதல் பலம்.
படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல் கலகலப்பாக படத்தை இயக்கிய இயக்குனர், இசையமைபாளர்,கதாநாயகன் ஆதிக்கு பாராட்டுகள்
“மீசையை முறுக்கு 2”அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கலாம்.