நாயகன் அசோக் செல்வனை ப்ரீத்தி முகுந்தன் தான் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை திருமணமும் செய்து கொள்கிறார்.இருவரும் சென்னையில் 7 நட்சத்திர விடுதிகளில் வேலை பார்க்கிறார்கள்.அவர்களுக்கு மேல் வேலை செய்பவர்களால் அவ்வப்போது அவமானப்படுத்தப் படுகிறார்கள்.இதனால் இவர்கள் இருவரும் தங்களது கவலையை மறக்க மலைபிரதேசத்துக்கு செல்கிறார்கள். அஙுகு சென்றதும் பிரீத்தி முகுந்தன தனது நீண்டநாள் ஆசையை அசோக் செல்வனிடம் சொல்கிறாள். அது என்ன ஆசை தன் மனைவியின் நீண்டநாள் கனவு ஆசையை அசோக் செல்வன் நிறைவேற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
அசோக் செல்வன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அழகாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
ப்ரீத்தி முகுந்தன் கணவனுடன் இணைந்து போராடும் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றும் கதிர் பாலு,மஹா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமத்,ரேவதி ஆகியோர் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் இசையும்,
கௌதமின் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
கணவன் மனைவிக்குள்ளான பாசபிணைப்பை மையக்கருவாக கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதையை ஒரு காவியமாக உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“அன்பில் அவன்”அன்பு,பாசம் மிகுதியானவன்.
