“ஆல்பாஸ்” விமர்சனம்

துஷ்யந்த் ஜெயபிரஷ்,ஜெயபிரகாஷ், சுப்பிரமணி சிவா ஆகிய மூவரும் உயிர் நண்பர்கள் நண்பர்களான இவர்கள் வடசென்னை குடியிருப்பு பகுதியில் தங்களது குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் சரத் லோகித்ஷவா அப்பகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.தேர்தல் செலவுக்கு தனது 5 கோடி ரூபாயை தனது பழைய குடோனில் பதுக்கி வைத்திருக்கிறார்.அந்த பணத்தை பட்டுவாடா செய்யவிருக்கும் நிலையில் துஷ்யந்த் ஜெயபிரஷ்,ஜெயபிரகாஷ், சுப்பிரமணி சிவா ஆகிய மூவரின் மகன்களிடம் அந்த பணம் கிடைக்கிறது.
அந்த 5கோடி ரூபாயை அவர்கள் ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் கொண்டு வருகிறார்கள்.அந்த பணத்தை ஜெயப்பிரகாஷை தவிர மற்ற இரண்டு பேர்களும் அம்மூவரின் மனைவிகள் செந்திகுமாரி,வினோதினி,மோகனா,மகள் ஜனனி.பணத்தை கொண்டுவந்த மூன்றுபேரின் மகன்களும் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். பணம் தன் வீட்டில் இருப்பதை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று மனைவி செந்தி குமாரியிடம் சத்தியம் செய்துவிடுகிறார் ஜெயபிரகாஷ். இந்நிலையில் தனது பணம் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள்தான் இருக்கிறது என்பது எம்.எல்.ஏ.சரத் லோகித்ஷவாவுக்கு தெரியவருகிறது.அது யார் வீட்டில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தனது ஆட்களைவிட்டு சந்தேகப்படாத வகையில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று பணத்தை தேடும்படிசொல்கிறார். அந்த பணம் கிடைத்ததா இல்லையா பணம் இருக்கும் வீடு யார் வீடு என்பதை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே மீதிக் கதை.
துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் ஜனனி,ஜெயப்பிரகாஷ்,
செந்திகுமாரி,இயக்குநர் சுப்பிரமணிய சிவா,வினோதினி,பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர்,சத்யா,சஞ்சய்,கோகுல், நிகில்,சரத் லோகித்ஷவா,ரோஷன் பஷீர், அருவி மதன்,இயக்குநர் மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தில்ராஜு அவர்களின் ஒளிப்பதிவும்,ஜேம்ஸ் வஸந்த்தின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
வடசென்னைவாசிகள அனைவரும் ஒருவருக்கொருவர் பகைவளர்களாகவே வாழ்பவர்கள் என்ற கண்ணோட்டத்தை மாற்றி நண்பர்கள் அனைவரும் உறவினர்களாகதான் வாழ்கிறார்கள் என்பதை மையககருவாக கையில் எடுத்து அதற்கு சிறந்தமுறையில் திரைக்கதை அமைத்து இயக்கிய இயக்குனர் மைதீன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“ஆல்பாஸ்”அனைத்து தரப்பினரும் காண வேண்டிய படம்.