kollywood news

மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனம்

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர்கள், வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனம்

அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் சுஜாதாவும் கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள்.ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான் ஆனால், அருண்குமார் மலேசியா செல்வதாக சென்ன விமானம் கடலில் விழுந்து விட்டதாக செய்திகள் வருகின்றன.

பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலையமையை சமாளிக்கப்போகிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா எம்.எஸ். பாஸ்கர் ஒருவர் இந்த விவகாரத்தை ஆறாய ஆரம்பிக்கிறார்.

மொத்தமே ஆறு கதா பாத்திரங்கள். இதை வைத்துக்கொண்டு ஒரு காமெடி திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் கதையின் ஒன்லைன் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. தவிர, துப்பறியும் மாமாவின் பாத்திரமும் கதைக்கு கலகலப்பை சேர்த்திருக்கிறது.

சிக்கலான சூழலில் உருவாகும் அபத்தமான தருணங்களை நகைச்சுவையாக தந்திருக்கிறார் இயக்குனர்
ராதாமோகன்.

இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் எம்.எஸ். பாஸ்கரும் கருணாகரனும் வரும் காட்சிகள் சற்றுப் பரவாயில்லை. வாணி போஜனுக்கு, இந்தப் படம் நன்றாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் குறை சொல்ல முடியாதபடி அமைந்திருக்கின்றன.

படத்தின் பிளஸ்: எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன் நடிப்பு; பிரேம்ஜியின் இசை, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு

மொத்தத்தில் மலேசியா டு அம்னீஷியா ஒரு முறை பார்க்கலாம் என்றிருக்கிறது

Get real time updates directly on you device, subscribe now.