
எமோஜி தமிழ் வெப் சீரீஸ் விமர்சனம்
ஆதவ் (மஹத்ராகவேந்திரர்) ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார். யதார்த்தமாக பிராத்தனா (மானசா சௌத்ரி) பார்க்க, மானசாவின் உடலமைப்பிலும், அழகிலும் மயங்கி அவளை காதலிக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக பிரிகின்றனர். பிரிந்ததால் மஹத் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதே போல், இவர்களின் எதிர் ப்ளாட்டில் தீக்ஷா (தேவிகா சதீஷ்) மற்றும் அவரது காதலனோடு லிவ்விங் டுகெதரில் வாழும் இவர்களும் ஒரு நாள் ப்ரேக் அப்பில் விழுகின்றனர். பிறகு இந்த மனஅழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியாமல் மகத் தவிக்கிறார். அப்போது எதிர் ப்ளாட்டில் ப்ரேக் அப் ஆன தேவிகாவைச் நட்புடன் பழகி அவளுடன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார். அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை வெளிப்படுத்தி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமண வாழ்க்கை சுமூகமாக நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள். அவர்கள் ஏன் பிரிந்து செல்ல விரும்புகிறார்கள்? அவர்கள் விவாகரத்து செய்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் கதை. யதார்த்த நடிப்பில் மகத் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பிலும் திரைக்கதை தேர்விலும் நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளார்.
தேவிகா – மானசா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ரொமான்ஸிலும் சரி கவர்ச்சியிலும் சரி கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளனர்;. குறிப்பாக தேவிகா வேற லெவல்.
இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஏது ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் நண்பர்கள் என அனைவரும் படத்திற்கு பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு, சனத்பரத்வாஜ் இசை நன்றாக உள்ளது.
இன்றைய கார்ப்பரேட் உலக காதலையும் திருமண வாழ்க்கையையும் திரைக்கதையாக அமைத்து கவர்ச்சியை புகுத்தி ரொமான்டிக்கான காதல் வெப் சீரியஸாக சென்.எஸ்.ரங்கசாமி இயக்கியுள்ளார்.
மொத்தத்தில் எமோஜியின் ஏழு எபிசோட்களும் ரசிகர்களை கவரும்
