ஓட்டல் உரிமையாளரான நளன் அவரது காதலி கயல், ஒரு செயலி உருவாக்க விரும்புகிறாள். இதன் மூலம் ஒருவர் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளலாம். கயலின் சகோதரர் பிரேம் ஒரு போலீஸ் அதிகாரி சகோதரியின் காதலன் நளனை துளியும் அவருக்கு பிடிக்காது. மேலும் நளன் மற்றும் கயலை பிரிப்பதற்கான வாய்ப்பு தேடுகிறார். இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் நளனின் உணவகத்திற்குச் செல்லும் வாடிக்கையாளர் ஒரு பொம்மையை கொண்டு வருகிறார், அது ஒரு மர்மமான பண்டைய எகிப்திய சிலை. உணவகத்தில் இருந்து திரும்பும் போது அந்த பொம்மையை அவர் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்து விடுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, உணவகத்தில் விசித்திரமான விஷயங்கள் நடக்கத் தொடங்குகிறது. உணவகத்தின் குளிர்சாதனப்பெட்டியில் அற்புதமான சுவையுடன் கூடிய இனிப்பு தோன்றிக்கொண்டே இருக்கிறது, ஹோட்டல் ஊழியர்கள் நளன்தான் புதிய செய்முறையால் தயாரித்திருப்பதாக நினைக்கிறார்கள்.
வித்தியாசமான பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதை உணர்ந்த நளன் முதலில் ஆச்சரியப்பட்டாலும் அதை பொருட்படுத்தவில்ல.ஆனால் அவர் இரவில் சில அசைவுகளை கவனிக்கத் தொடங்குகிறார். மேலும் பல கொலை சம்பவங்கள் நிகழ்கிறது.அந்த கொலைகளை நளன் தான் செய்திருப்பார் என்று போலீஸ் அதிகாரி பிரேம் சந்தேகித்து நளனை விசாரிக்கிறார். நடைபெறும் விசித்திரமான நிகழ்வுகள் மற்றும் கொலை பழி நளனை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆகையால் உணவகத்திற்குள் என்ன நடக்கிறது என்று கண்டறிய அவர் தனதது ஓட்டல் சமையலறைக்குள் ஒரு வீடியோ கேமராவை பொறுத்துகிறார்.அதை பார்க்கும் போது, உள்ளே ஆவி நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.தொடர் கொலைகள் மற்றும் அமானுஷ்யங்கள் ஏன் நடக்கிறது? அதற்கு என்ன காரணம் அதை தொடர்ந்து அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது மீதிக்கதை.
அஷ்வின் தைரியத்தையும் பயத்தையும் குழப்பத்தையும் நன்றாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
காதலி பவித்ரா மாரிமுத்து தனது பங்கை சிறப்பாக எதார்த்தமாகவும் செய்துள்ளார்.
சமயல்காரராககாளி வெங்கட்டும், போலீஸ் அதிகாரியாக வரும் கௌரவ் நாராயணன் சிறப்பாக நடித்துள்ளனர்.
பாசமான தாயாராக அனுபமா குமார், இவரது மகள் மித்ராவாக அபி நக்ஷத்ரா, வில்லனாக வரும் கவிதா பாரதி ஆகியோர் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளனர்.
பிரபு ராகவ் ஒளிப்பதிவும் இக்னேசியஸ் அருண் ராஜ் இசையும் கதைக்கு பக்க பலம்.
இயக்குனர் மோகன் கோவிந்த் புது விதமான கதை அமைத்து அதில் அமானுஷ்ய சக்தியை உள் நுழைந்து திரைக்கதையில் ஒரு உணர்ச்சிகரமான மற்றும் பயத்தை கொடுக்கும் ஒரு பழிவாங்கும் கதையாக தந்திருக்கிறார் அவருக்கு பாராட்டுகள்.
பீட்ஸா 3 வேகம் பயம் நிறைந்த படைப்பு.
