பாண்டிச்சேரியில் பாழடைந்த ஒரு ‘பிரெஞ்ச் பங்களா’ பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அந்தப் பங்களாவில் வாழ்ந்த வெள்ளைக்காரரான பிரதீப் ராவ் அங்கே சூதாட்டம் நடத்துகிறார். அந்த சூதாட்டத்தில் அக்கம், பக்கத்தில் வசிக்கும் ஆண்கள் அனைவரும் தங்களது சொத்துக்களை இழந்து தெருவுக்கு வந்துவிட்டனர்.
இதனால் கோபமடைந்த அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து பிரதீப் ராவத்தின் குடும்பத்தினர் அனைவரையும் படுகொலை செய்கிறார்கள். அந்த வீட்டையும் தீ வைத்து எரித்துவிடுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பிரதீப் ராவத்தின் குடும்பத்தினர் அனைவரும், இப்போதும் அந்த வீட்டில் பேயாய் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
பாண்டிச்சேரியில் மிகப் பிரபலமான தாதா பெப்சி விஜயன். இவரது மகன் ரெடின் கிங்ஸ்லி இவருக்கு பிரெஞ்சு குடியுரிமை பெற வேண்டி, பிரெஞ்சு குடியுரிமையுள்ள சுரபியின் அக்காவை கல்யாணம் செய்து கொள்ள பேசி முடிவு செய்து இதற்காக 25 லட்சம் ரூபாயையும் தந்திருக்கிறார் பெப்சி விஜயன்.
பாண்டிச்சேரியில் ஆர்ட் கேலரி என்ற பெயரில் போதை மருந்து கடத்தல் செய்து வருகிறார் பிபின். இவரிடத்தில் வேலை செய்பவர் முனீஸ்காந்த்.
அதே பாண்டிச்சேரியில் மொட்டை ராஜேந்திரன், தங்கத்துரை, சைதை சேது மூவரும் சின்னச் சின்னத் திருட்டுக்களில் ஈடுபட்டு வருபவர்கள். ஒரு நாள் போலீஸ் இவர்களைத் தேடும்போது அவர்களிடமிருந்து தப்பிக்க பிபின் நடத்தும் ஆர்ட் கேலரிக்குள் நுழைகிறார்கள்.
அந்த ஆர்ட் கேலரியில் போதைப் பொருளும்,மிக அதிகமான பணமும் இருப்பதைப் பார்த்து அடுத்த நாளே இங்க கை வைச்சுர வேண்டியதுதான் என்று திட்டம் போடுகின்றனர்.
இதே போல் பிபினிடம் முனீஸ்காந்த் பெப்சி விஜயன் வீட்டில் கொள்ளையடித்தால் லைப்ல செட்டில் ஆயிடலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பெப்சி விஜயனின் மகனுக்கு அடுத்த நாள் திருமணம் என்பதால் அவரது வீட்டில் கொள்ளையடிக்க இது தான் சரியான நேரம் என்று திட்டம் போடுகின்றனர்.
கல்யாண வீடுகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யும் வேலையை செய்து வரும் சந்தானம் சுரபியைக் காதலித்து வருகிறார். சுரபியின் அக்கா, கல்யாண நாளன்று காலையில் யாருடனோ ஓடிவிட சுரபியை ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் பெப்சி விஜயன்.
இதையறிந்த சந்தானம் ரெடின் கிங்ஸ்லியை தனது காரில் கடத்திச் செல்கிறார்.அதே காரை நடுவழியில் கடத்திச் செல்கிறார் மொட்டை ராஜேந்திரன். வழியில் கார் டிக்கியில் ரெடின் கிங்ஸ்லி இருப்பதை அறிந்து அவரை இறக்கவிடுகின்றனர்.
காரைத் தேடி வரும் சந்தானம் ஆர்ட் கேலரி வாசலில் இருந்த காரை பார்த்து அதில் ஏறி உட்காரும் போது அந்தக் காரின் டிக்கியில் பிபின் முனிஷ்காந்த் பெப்சி விஜயன் வீட்டில் கொள்ளையடித்த மொத்த பணத்தையும மொட்டை ராஜேந்திரன் கும்பல் அவர்களிடம் இருந்து பறித்து அதில் போடுகிறது.அதற்கு அடுத்த கணமே காரைக் எடுத்து கொண்டு சென்று விடுகிறார் சந்தானம்.
நடுவழியில் கார் நிற்கும்போது டிக்கியில் ரெடின் கிங்ஸ்லிதான் இருப்பார் என்று நினைத்து டிக்கியைத் திறந்தால் அங்கே பெப்சி விஜயன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் சந்தானம். அந்தப் பணத்தில் இருந்து 25 லட்சத்தை எடுத்து சுரபியிடம் கொடுத்து பெப்சி விஜயனிடம் இந்தப் பணத்தைக் கொடுத்து பிரச்சினையில் இருந்து வெளியே வர சொல்கிறார் சந்தானம்.
மீதமுள்ள பணத்தை பிரெஞ்ச் பங்களாவில் பதுக்கி வைக்கிறார்கள். மறுநாள் வந்து பணத்தைத் தேடும்போது பணம் காணாமல் போயிருக்கிறது.
அந்த வீட்டுக்குள் நுழைந்து சந்தானத்தையும் அவரது கும்பலையும் அந்தக் வீட்டின் தலைமை பேய் பிரதீப் ராவ் இனிமேல் எங்களுடன் டாஸ்க்கில் விளையாடி ஜெயித்தால் மட்டுமே நீங்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியும் என்று சொல்லி அவர்களை விளையாட்டுக்கு அழைக்கிறார். சந்தானமும் விளையாடத் துவங்குகிறார்.
இன்னொரு புறம் தன் வீட்டில் கொள்ளையடித்த பணத்தை தன்னிடமே கொடுத்திருப்பதை அறிந்த பெப்சி விஜயன், சுரபியையும், அவரது அம்மாவையும் மிரட்டி சந்தானத்துடன் பேச வைத்து பணத்தை மீட்க நினைக்கிறார். இதனால் சுரபியும் சந்தானம் இந்த வீட்டிற்குள் இருப்பதை அறிந்து இவரும் இந்த வீட்டிற்குள் வருகிறார்.
காரைத் தேடி முனீஸ்காந்த்தும் பிபினும் இந்தப் பேய் வீட்டிற்குள் வருகிறார்கள் இப்படி இவர்கள் அனைவருமே அந்தப் பேய் வீட்டிற்குள் வந்து தஞ்சமடைகின்றனர்.
விளையாட்டில் சந்தானம் கும்பல் வெற்றி பெற்றதா அந்தப் பணம் எஙகே போனது பேய்கள் என்னவானது என்பதுதான் மீதிக்கதை
இயக்குநர் பிரேம் ஆனந்த் மிகவும் நேர்த்தியாக இத்திரைக்கதையை அமைத்துள்ளார்.
தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவும் ஆப்ரோவின இசையும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது கலை இயக்குனர் ஏ.ஆர்.மோகன் எதார்த்தமாக கலை அமைத்துள்ளார்
சந்தானம் சக நடிகர்களுக்கு ஈடு கொடுத்து எதார்த்தமாக நடித்துள்ளார்
சுரபி சந்தானத்திற்கு கச்சிதமாக பொறுந்தியுள்ளார் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்
மற்றவர்கள் அனைவரும் அவரவர் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வித்யாசங்கள் நிறைந்த அனைவரும் பார்த்து ரசிக்கும் படியான படம்
