காதலர் தினத்தில் கலாம் கனவுகளுக்கு இசை மரியாதை…

*காதலர் தினத்தில் கலாம் கனவுகளுக்கு இசை மரியாதை…*
உலகெங்கும் ஒலிக்கத் தயாராகும் உன்னத ஊக்கப்பாடல்!*

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், அறிவியல் மேதை டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் நினைவாக,
கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ஒரு மாபெரும் ஊக்கப்பாடல், உலகளாவிய வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

வாழ்க்கையில் தோல்விகளால் நம்பிக்கையை இழந்து, மனதளவில் சோர்ந்து நிற்கும் ஒவ்வொரு மனிதரையும் மீண்டும் எழச்செய்யும் நோக்கில், இந்த Motivation Song உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரண பாடல் அல்ல;
👉 வீழ்ந்தவர்களை எழுப்பும் குரல்,
👉 தோல்விகளை வெற்றியாக மாற்றும் சக்தி,
👉 கலாம் கனவுகளுக்கான இசை மரியாதை
என பல பரிமாணங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

📅 2026 பிப்ரவரி 14 – காதலர் தினத்தன்று
🎶 உலகமெங்கும் பயணிக்கத் தயாராகும் இந்தப் பாடலை,

இலண்டன் வாழ் தொழிலதிபரும், சமூக சேவகருமான டாக்டர்
மாலா குமார் தயாரித்துள்ளார்.

🎼 இசை :
தமிழ் திரைப்பட உலகின் அனுபவமிக்க இசையமைப்பாளர் P.C. சிவன்

🎤 பாடல் :
பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ்

✍️ பாடலாசிரியர் :
‘ஐயோசாமி’ பாடல் மூலம் பெரும் கவனம் பெற்ற கவிஞர் பொத்துவில் அஸ்மின்

“வீழ்ந்தவர்களை எழுப்பவே இந்தப் பாடல்…”
என்ற மையக் கருத்துடன், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் வாழ்க்கையில் போராடும் ஒவ்வொரு மனிதருக்கும் நம்பிக்கையூட்டும் ஒரு குரலாக இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

விரைவில்…
உலகெங்கும் நம்பிக்கையின் இசை ❤️🔥