நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம்

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட,நகர,ஒன்றியம்,பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

இந்த நிகழ்வில் ரசிகர்களுடன் கலந்துரையாடி விட்டு பிறகு அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.மேலும் நமது அறிவுத் திறன் மற்றும் படிக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் புத்தக கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது இதில் முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டர்.

மற்றும் இதில் ஏராளமானோர் புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். இதில் 2000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வு முடிந்தவுடன் அனைவருக்கும் மதியம் உணவு வழங்கப்பட்டது.