அக்காலி விமர்சனம்

அக்காலி சாத்தான்களை வழிபடும் குழுவை வழிநடத்தும் தலைமைப் பதவி.
போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க ஒரு சுடுகாட்டுக்கு போன இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு வேறு ஒரு அதிர்ச்சியான தகவல் அங்கே காணக் கிடைக்கிறது.அது சாத்தான்களை வழிபடும் ஒரு கொடூர கும்பலை பற்றியது.
அதில் அமானுஷ்யப் பிரச்சனைகள் எழுவதால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் திடீர் திடீர் என்று காணாமல் போய் விடுகிறார்கள் என்னதான் நடக்கிறது என்று துப்பறிவதற்க முன்னரே அந்த வழக்கில் இருந்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை வெளியேறச் சொல்லி மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருகிறது.
ஆனாலும் விடாமல் அந்தக் கேசை துப்பறிகிறார் ஜெயக்குமார் இதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா இதன் முடிவு என்ன என்பதே இந்தப் படத்தின் மீதிக் கதை.
நாசர் இரு வேடங்களை ஏற்று மிக சிறப்பான முறையில் நடித்துள்ளார்.
தலைவாசல் விஜய்,ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன்,வினோதினி,அர்ஜய், சேகர்,யாமினி,தாரணி,பரத் என ஏனைய கதா பாத்திரங்கள் அவரவர் பணியைச் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கிரி முர்பியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம்.
தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கம் பிரமிக்க வைக்கிறது.
இந்த கதைக்காக இயக்குனர் முகமது ஆசிப் ஹமீத் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை அவர் எழுதி இயக்கி இருக்கிறார் அவருக்கு பாராட்டுகள்.
படத்தின் மேக்கிங் சிறப்பு.
அக்காலி புது கதைக்களம்.