படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் வயதில் இளைஞன் மாஸ்டர் மகேந்திரன் தவறான பழக்க வழக்கங்கள் தவறான நண்பர்களால் வீட்டுக்கு அடங்காத மகனாக வலம் வருகிறார் சந்தர்ப்ப சூழலால் ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அமிகோ கேரேஜ்க்குள் செல்ல மஹேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. சிறுவயதிலிருந்தே அவரது ஏரியாவில் இருக்கும் அமிகோ கேரேஜ் என்கிற கார் செட்டில் உள்ளவர்களுடன் பழக வேண்டும் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கும் மகேந்திரனுக்கு இந்த வாய்ப்பு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது அதற்கு ஓனராக இருக்கும் ஜிஎம் சுந்தருடன் நல்ல உறவு ஏற்படுகிறது. ஸ்கூலில் தொடங்கி கல்லூரி முடியும் வரை தினசரி அங்கு சென்று பேசி அரட்டை அடித்து அனைத்தையும் கற்றுக் கொள்கிறார் மகேந்திரன்.ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் பெரிய ரவுடியாக இருக்கும் நபருக்கும் ஹீரோவுக்கும் பாரில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை மகேந்திரனின் வாழ்க்கையை எப்படி திசை மாற்றுகிறது என்பதே அமிகோ கேரேஜ் படத்தின் மீதிக்கதை கதை.
ஒரு நடுத்தர வீட்டு பையனாக மஹேந்திரன் தனது இயல்பான எதார்த்தமான நடிப்பை நடித்துள்ளார்.
ஹீரோயின் அதிரா ராஜ் படம் முழுவதும் அமைதியாகவும் அழுத்தமாகவும் அழகாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தின் ஏனைய நடிகர்களான ஜி.எம்.சுந்தர்,தீபா பாலு,தசரதி,முரளிதரன் சந்திரன் ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
விஜயகுமார் சோலை முத்துவின் ஒளிப்பதிவும் பாலமுரளி பாலுவின் இசையும் படத்துக்கு பலம்.ரூபன் மற்றும் சி.எஸ்.ப்ரேம்குமார் ஆகியோரின் எடிட்டிங் கச்சிதம்.
சொல்ல வந்த கதையை தெளிவாக சொன்ன அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜனூக்கு பாராட்டுகள்.
அமிகோ கேரேஜ் பார்க்க வேண்டிய படம்.
