விமல் வழக்கமான தனது இயல்பான, ஜாலியான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.
ஸ்ரேயா மாயா என்கிற கதாபாத்திரத்தில் ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் நடித்து, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் புன்னகை பூ கீதா,பிரபு, கே.ஆர்.விஜயா,ரேகா,சத்தியன்,தேவ் கில், உமா பத்மநாபன்,க்ரேன் மனோகர்,மகாநதி சங்கர் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
அம்ரிஷின் இசையும்,ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
இப்படி ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து ஆரம்பம் முதல் முடிவு வரை கலகலப்பாக இயக்குயிருக்கும் இயக்குனர் மாதேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.
“சண்டக்காரி”கலகலப்பு