விமல் லண்டனிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு வேலைக்கு சேர்கிறார்.அந்நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாக இருக்கிறார் ஸ்ரேயா சரண்.மிகவும் கோபக்காரியான இவர் தனக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களை திட்டி தீர்த்துவிடுவார்.மிகவும் பொல்லாதவள். அவரிடம் வேலை செய்ய முடியாமல் பலபேர் வேலையை விட்டு ஓடிவிடுகிறார்கள்.ஸ்ரேயாவின் ஏச்சிக்கும் பேச்சிக்கும் விமல் ஈடுகொடுத்து எப்படி ஸ்ரேயாவை தன் வழிக்கு கொண்டுவந்தார் என்பதே மீதிக்கதை.
விமல் வழக்கமான தனது இயல்பான, ஜாலியான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.
ஸ்ரேயா மாயா என்கிற கதாபாத்திரத்தில் ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் நடித்து, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் புன்னகை பூ கீதா,பிரபு, கே.ஆர்.விஜயா,ரேகா,சத்தியன்,தேவ் கில், உமா பத்மநாபன்,க்ரேன் மனோகர்,மகாநதி சங்கர் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
அம்ரிஷின் இசையும்,ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
இப்படி ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து ஆரம்பம் முதல் முடிவு வரை கலகலப்பாக இயக்குயிருக்கும் இயக்குனர் மாதேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.
“சண்டக்காரி”கலகலப்பு
Get real time updates directly on you device, subscribe now.
Prev Post
Next Post