kollywood news

“நல்ல படம்” விமர்சனம்

நாயகன் ஹரிஷ் பெரும் குடிகாரனாக ஊரில் வலம் வருகிறார்.காலையிலிருந்து இரவு வரைக்கும் மதுபாட்டிலோடே தனது நண்பர்களுடன் ஊர்சுற்றுவார்.அவர் வாழும் கிராமத்தில் மதுகுடிப்பவர்களின் உரிமைக்காக நடுவீதிக்கு வந்து போராடும் பழக்கமும் உள்ளவர்.அதற்காகவே‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’என்ற ஒரு சங்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருக்கிறார்.இதனால் அவ்வூரிலுள்ள குடும்ப பெண்கள் மிகவும் வறுமைக்கு ஆளாகுகிறார்கள்.அவ்வூர் ஆண்களுக்கு யாரும் பெண் கொடுக்கமுன்வருவதில்லை. இவ்வாறு இருக்கும்போது அரசாங்கம் திடீரென்று மதுவிலக்கை அமல்படுத்துகிறது.குடும்ப பெண்கள் குதூகலமாக மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் மதுவுக்கு அடிமையாகியிருக்கும் ஆண்கள் தற்கொலைக்கு முயல்கிறார்கள். இதனால் மது குடிப்போர் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஹரிஷ் மீண்டும் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று அரசாங்கத்தோடு போராடுகிறார்.முடிவு என்னவானது என்பதே படத்தின் மீதிக்கதை.
போதையில் மிதந்து கொண்டிருக்கும் கதாபாத்திரமாக ஹரிஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
ஹரிஷை காதலிக்கும் பெண்ணாக தனலட்சுமி சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் மொட்டை ராஜேந்திரன்,கல்கி ராஜா, ரமா ராஜேந்திரா,ரமா பிரியதர்ஷினி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜெ.ஹாரிஷ் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் சஜிஷ்னாசேவியர் இசையும் கதைக்கு பலம்.
இப்படி ஒரு சிறந்த கதையை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து ஒரு சமுதாய உணர்வை ஏற்படுத்தி இருக்கும் இயக்குநர் சி.பிரபுராம் அவர்களுக்கு பாராட்டுகள்.
நல்லபடம் போதையினால் ஏற்படும் இன்னல்களை எடுத்து கூரும் நல்ல படமே.

Get real time updates directly on you device, subscribe now.