‘அங்கீகாரம் ’ விமர்சனம்

நாயகன் கே.ஜெ.ஆர் தடகள வீரர், துப்புரவுப் பணியாளராக இருக்கும் தாய் ரமா,வழக்கறிஞராகப் பயிற்சி பெறும் தங்கையுடன் வசித்து வருகிறார்.சிறு வயதில் இருந்தே காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார்.இதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.இவருக்கு பயிற்சியாளராக இருக்கும் வசுந்தரா கடுமையாக பயிற்சி கொடுத்து வருகிறார். இதனையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் சமயம் தசை பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாத நிலை ஏற்படுகிறது.எனினும் தனது கடுமையான பயிற்சியின் மூலம் முழு உடற் தகுதி பெற்று இருந்தும்  காமன்வெல்த்  போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெயர் பட்டியலில் இவரது பெயர் நிராகரிக்கப்படுகிறது. இதனையடுத்து நீதி கேட்டு நீதிமன்றம் செல்கிறார். இறுதியில்  நாயகன் கே.ஜெ.ராஜேஷுக்கு நீதி கிடைத்ததா இல்லையா காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
தடகள வீரராக நடித்திருக்கும் கே.ஜெ.ஆர் அறிமுக நாயகன் போல இல்லாமல் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றும் விஜி வெங்கடேஷ்,ரமா,வசுந்தரா, அஜித் கோஷி,சிந்தூரி விஸ்வநாத்,மன்சூர் அலிகான்,ரங்கராஜ் பாண்டே,மோகன் ராம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையும், விஸ்வநாத் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிறந்த திரைக்கதையாக உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குநர் தென்பாதியான் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அங்கீகாரம் உண்மையான உழைப்பிற்கான போராட்டம்.