கதையின் நாயகன் அஜிதேஜ்,300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிசய சூரிய கிரகணத்தைப் ஒரு பழமையான டெலஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்யும் போது அவரது கண்களில் ஒரு அதிசய மாற்றம் நிகழ்கிறது. அது என்னவென்றால், ஒருவர் கண்ணைப் பார்த்தால் அவர்களின் மரண நாள் அவருக்கு துல்லியமாக தெரிந்து விடும்.இந்நிலையில் அஜிதேஜ்,தனது காதலி ஸ்ரீஸ்வேதாவின் கண்களை பார்க்கும் போது,அவர் இன்னும் 7 நாட்களில் இறந்துவிடுவார் என்பது அவருக்கு தெரிய வருகிறது.எப்படியாவது தன் காதலியை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் எடுக்கிறார்.ஆனால் ஏற்கனவே நாய்க்கடிக்கு ஆளான அவரது காதலி ஸ்ரீஸ்வேதாவுக்கு ரேபிஸ் பாதிப்பு வர,ஸ்ரீஸ்வேதா மரணத்துடன் போராடுகிறார்.அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
அஜிதேஜ் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
ஸ்ரீ ஸ்வேதா இவரும் அவருக்கு இணையான நடிப்பை வழங்கி நடித்துள்ளார்.
மற்றும் கே.பாக்யராஜ்,நமோ நாராயணன், தலைவாசல் விஜய்,சுபாஷினி கண்ணன், செம்புலி ஜெகன்,வாசு சீனிவாசன்,சாய் கோபி,ராகவன் உட்பட அனைவரும் தங்களது பாத்திரத்திற்கு நிறைவான நடிப்பை தந்து நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரையின் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் பரபரப்பான கதைக்கு சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இயக்குனர் எம். சுந்தர் அவர்களுக்கு பாராட்டுகள்.
அந்த 7 நாட்கள் காதல் கலந்த சஸ்பென்ஸ்.
