ரைட் விமர்சனம்

பிரதமர் சென்னைக்கு வருவதால் நகரமே பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் பாதுகாப்பு பணிக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் நட்டி சுப்ரமணியம் போலீஸ் படையுடன் பந்த​போஸ்துக்கு செல்கிறார். லாக்க​ப்பில் அமைச்சரின் கைகூலிகள் ஒரு சிலர் குற்ற செயலுக்கு சிறையில் இருக்கின்றனர். அந்த நேரத்தில், காவல் நிலையத்தில் உள்ள ரைட்டர் மூணார் ரமேஷ் உதவியுடன் அமைச்சரின் மகன் லாக்கப்பில் இருக்கும் தனது ஆட்களை அழைத்து சென்று விடுகிறான். இந்நிலையில், காவல் நிலையத்தில் திருடன் தங்கதுரையிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட திருட்டுப் பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப கொடுக்கின்றனர். ஆனால் அந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பெருட்களுடன் அதிநவீன லேப்டாப் ஒன்றும் காணப்படுகிறது. அந்த லேப்டாப்பை தனது மகனுக்காக எடுத்துக் கொள்ள ரைட்டர் மூணார் ரமேஷ் முயற்சிக்கிறார். அப்போது, அந்த லேப்டாப்பை திறந்து ஆன் செய்ய முயற்சிக்கிறார். எப்படி ஆன் செய்ய வேண்டும் என்று முழித்துக்கொண்டு இருக்கும் போது, தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அக்க்ஷரா ரெட்டி அங்கு வருகிறார். அப்போது,போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மேனகா ரைட்டருக்கு லேப்டாப்பை எப்படி ஆன் செய்வது என்று சொல்லித் தர அவரை அவரது இருக்கையில் அமர்த்திய பிறகு, அந்த லேப்டாப்பை திறந்து ஆன் செய்து பார்க்கும்போது, தொழில்நுட்பம் மூலம் காவல் நிலையம் ஹேக் செய்யப்படுகிறது. ரைட்டர் மூணார் ரமேஷ் அமர்ந்திருக்கும் நாற்காலியின் கீழே பாம் இருக்கிறது, அதனால் அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்தால்காவல் நிலையம் வெடித்து சிதறும், மேலும் காவல் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்று எச்சரிக்​கிறான் ​ஒரு​மர்ம நபர். அதனால்,காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாக வெடிக்கும் என்றும் மிரட்டி காவல் நிலையம் முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான் அந்த ​மர்ம நபர். ​அந்த ஸ்டேஷனில் ரைட்டர்
மூணார் ரமேஷ் ,ஒரு​ பெண் போலீஸ் ஏட்டு, ஒரு கைதி,ஒரு​ திருடன்,சப்​-இன்ஸ்பெக்டர் அக்க்ஷசரா மற்றும் தனது மகன் ஜெய் காணவில்லை என்று புகார் கொடுத்த முதியவர் அருண் பாண்டியன் ஆகியோர் வெளியே செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கிறார்கள். மேலும் காவல் நிலையம் உள்ளே வருபவர்கள் வெளியே செல்ல முடியாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளான். ​அந்த மர்ம நபர் நான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும், இல்லை என்றால் ஒவ்வொரு குண்டுகளை வெடிக்க விடுவேன் என்று மிரட்டு​கிறான். பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது காவல் நிலையத்தில் இப்படி இக்கட்டான ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது என்று பொது மக்களுக்கு தெரிய வந்தால் மக்களிடம் பதற்றம் அதிகரித்து பிரச்சனை ஆகிவிடும் என்று இந்த விஷயம் வெளியே தெரியாத வகையில், அதை​ ரகசியமாக கையாள காவல்துறை முயற்சிக்கிறது. அதே சமயத்தில் அந்த மர்ம நபர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டு போலீஸ் உதவியுடன் பழியை ஒரு அப்பாவியின் மீது சுமத்திய அந்த குற்றவாளியை மீண்டும் விசாரித்து உடனே தண்டனை வழங்க வேண்டும் என எச்சரிக்கிறான். அவன் எச்சரிக்கை படி, காவல் நிலையம் வரும் நீதிபதி வினோதினி​ மர்ம நபர் கூறிய அந்த ஒரு பழைய கேசை விசாரிக்கிறார்.அந்த கேஸ் என்ன யார் அந்த உண்மையான குற்றவாளி இன்ஸ்பெக்டர் நட்டி இதை எப்படி கையாண்டார் போலீஸ் நிலையத்தில் இருக்கும் பாம் வெடித்ததா அனைவரையும் மிரட்டி காவல் நிலையம் முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த மர்ம நபர் யார் முதியவர் அருண் பாண்டியன் மகன் ஜெய் கிடைத்தானா காவல் நிலையத்தில் சிக்கியிருப்பவர் என்ன ஆனார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் மற்றொரு நாயகனாக முதியவர் சக்திவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் அருண்பாண்டியன் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் அழுத்தமாக மக்கள் மனதில் பதிவு பெற்றுள்ளார். இன்ஸ்பெக்டர் ரகுராமனாக நட்டி சுப்ரமணியம் கதையின் நாயகனாக தனது உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் மூணார் ரமேஷ்,தங்கதுரை,அக்க்ஷரா ரெட்டி, வினோதினி வைத்தியநாதன,யுவினா பார்த்தவி,ஆதித்யா சிவகுமார் அனைவரும் சிறப்பாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் குணா பாலசுப்ரமணியன் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நகரும்படியான திரைக்கதையை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பதற்றத்துடன் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ள அறிமுக இயக்குனர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார் அவர்களுக்கு பாராட்டுகள்.
ரைட் ஆல் ரைட்.