சாதி வெறி தலைக்கு ஏறிய கிராமம் அரிமா பட்டி இந்த ஊரில் நாயகன் பவன் வேறொரு சாதிப் பெண்ணான மேக்னாவை பள்ளி பருவத்தில் இருந்தே காதலிக்கிறார் ஒரு நாள் திருமணமும் செய்து கொள்கிறார்.
இந்த விஷயம் தெரிந்த அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்று கூடி பவனின் தந்தையான சார்லியை ஊர் பொதுவில் மன்னிப்பு கேட்கவைக்கிறார்கள்.அத்துடன் பவனுடன் அவர் குடும்பத்துக்கு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடும் விதிக்கிறார்கள். சார்லியின் தந்தையான அழகு தன் குடும்பமே பஞ்சாயத்தில் வந்து நிற்பதால் இந்த பஞ்சாயத்தின் பக்கம் தலை காட்டாமலேயே இருக்கிறார்.
மேக்னாவின் அண்ணன் பிர்லா போஸ் ஒரு பெரிய கும்பலுடன் சக்திவேலைத் தேடி அலைகிறார்.
இந்த எதிர்ப்புகளை மீறி பவன் தன் காதல் மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தாரா,இல்லை தந்தை சார்லியின் அன்புக்கு கட்டுப்பட்டாரா என்பது படத்தின் மீதிக் கதை.
அறிமுக நாயகன் பவன் முதல் படம் என்று இல்லாமல் யதார்த்தமாக நடித்துள்ளார் இன்னும் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
மேக்னா கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்துள்ளார்.
சார்லி இதிலும் தன் நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.
ஏனைய கதா பாத்திரங்களான இமான் அண்ணாச்சி ‘சூப்பர்குட்’ சுப்ரமணி, அழகு,பிர்லா போஸ அவரவருக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் மணி அமுதவனின் இசையும் ஒளிப்பதிவாளர் ஜெ பி மேனுமின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்துள்ளது.
இயக்குனர் ரமேஷ் கந்தசாமி சாதிவெறி கதையை சற்று வித்தியாசப்படுத்தி காணபிக்க முயற்சி செய்துள்ளார் திரைக்கதையில் இன்னும் ஆழம் தேவை.
அரிமாபட்டி சக்திவேல் மற்றும் ஒரு சாதி வெறி கதை.
