Author: admin

J.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படம்

J.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படம்

News
J.N. சினிமாஸ் தயாரிப்பில் 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்க ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார். வெற்றி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் இன்று (06.12.2019) துவங்கியது. ...
யோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்

யோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்

News
சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50  திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார். https://www.youtube.com/watch?v=54UK3qsnjk4   https://www.youtube.com/watch?v=4tEBsWhxEw4&feature=youtu.be இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்...
சூப்பர்ஸ்டாக்கு அடுத்து கார்த்தி தான் – தம்பி இசை வெளியீடு !

சூப்பர்ஸ்டாக்கு அடுத்து கார்த்தி தான் – தம்பி இசை வெளியீடு !

News
கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம்  இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது.. இந்தப்படத்தில் நடிச்சதே எனக்கு பெருமை. ஜோதிகா மேம், சத்யராஜ் சார் கூட எனக்கு காட்சிகள் இல்லைனாலும் அவங்க படத்துல நானும் இருந்ததே சந்தோஷம். கார்த்தி சார் நடிப்பதை நேரில் பார்த்து ரசித்தேன்.  ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுக்குற சிரத்தை என்னை பிரமிக்க வச்சது. படங்களை விமர...
என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு

என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு

News
வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் வெங்கட் பேசியதாவது, "தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற புரோக்ராமா இருக்கு. பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தண்டுபாளையம் ஒரு சென்ஷேனல் பெயர். தண்டுபாளையம் ஒரு க்ரைம் ஹிஸ்டர். ஏசியாவிலே இது இரண்டாவது க்ரைம். எந்த போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டும் கண்டு பிடிக்க முடியல. இதில் முக்கியமான விசயம் என்னன்னா எத்தனையோ க்ரைம் படம் பார்த்திருப்பீங்க. நிச்சயமாக நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். இதுபோல் ஒரு படத்தை க்ரைம் படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு டிபரெண்டான எக்ஸ்பீரியன்ஸ் இந்தப்படத்தில் இருக்கும். இப்படம் பார்த்து முடித்து வெளில வரும்போது ஒரு டென்சன் மனதில் இருக்கும். க்ரைம் பண்றவங்க...
ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

News
ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது ! சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEPSI) இரண்டும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் இன்று  (28 - 11-2019 வியாழன்) கையெழுத்தானது. அந்த கூட்டத்தில்  இரு சங்கங்களின் சார்பாக கலந்துகொண்டவர்கள் விபரம் வருமாறு :- சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) சார்பாக கலந்துகொண்டவர்கள் 1,திருமதி.சுஜாதா விஜயகுமார் -தலைவர்  2, திருமதி. குஷ்பு சுந்தர் - பொதுசெயலாளர் , 3,திரு. D.R.பாலேஷ்வர் - பொருளாளர் 4, திரு.T.V.சங்கர்-இணைச்செயலாளர் 5, திரு. ஹேமந்த்குமார் , செயற்குழு உறுப்பினர் . தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள...
“பிகில்” வேற “ஜடா” வேற.. நடிகர் கதிர் பளிச் பேச்சு!

“பிகில்” வேற “ஜடா” வேற.. நடிகர் கதிர் பளிச் பேச்சு!

News
“The poet studios” தயாரிப்பில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஜடா”. இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசியதாவது, "எனக்கு மெட்ராஸ் படத்தில ஒரு அண்ணன் கிடைச்சார். ஜடா படத்தில் எனக்கு ஒரு தம்பி கிடைத்துள்ளார். அது இயக்குநர் குமரன். கெளதம் எனக்கு மிக உறுதுணையாக இருக்கிறார். அவரது பேச்சில் ஒரு உண்மை இருக்கும். ரிச்சர்ட் எடிட்டர், ஆனால் அவர் ஸ்பாட்டில் வந்து வேலை செய்வார். டெக்னிஷியன்ஸ் வந்து ஸ்பாட்டில் சப்போர்ட் செய்தால் ஆர்ட்டிஸ்டுக்கு ரொம்ப எனர்ஜியாக இருக்கும். இன்று இளைஞர்கள் பெரியளவில் கொண்டாடும் இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ். அவருக்கு பெரிய நன்றி. நடிகர் கதிருடன் யார் பழகினாலும் அவர் மீது நமக்கு ...
SDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி

SDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி

News
சமீபத்தில் டிஸ்டிபூசனில் கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர். சேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள். இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர். பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை  SDC  பிக்சர்ஸ்  கைப்பற்றிள்ளது....
“தனுசு ராசி நேயர்களே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

“தனுசு ராசி நேயர்களே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

News
ஶ்ரீ கோகுலம் என்பது பன்னெடுங்காலமாக பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வரும் ஒரு பெரு நிறுவனம் ஆகும். மலையாளத்தில் பல படங்களை தயாரித்து வெற்றி பெற்றுள்ள அந்நிறுவனம் அடுத்த படியாக தமிழில் கால் பதிக்கிறது. ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் முதல்முறையாக தமிழில் தயாரித்துள்ள படம் “தனுசு ராசி நேயர்களே”. புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள“தனுஷு ராசி நேயர்களே” படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் தன் ராசிக்கேற்ற நாயகியை தேடி அலைகிறார் அதனால் அவர் வாழ்வில் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக...