நாயகன் அர்ஜுன் பிரபாகரன் ராப் பாடல்களை பாடி ராப் பாடகராக வளர்கிறார்.அதேசமயம் ஆராதயா தனியார் பள்ளி ஒன்றில் டீச்சராக இருப்பவர்.இவர்கள் இருவரும் காதலித்துவருகின்றனர்.இந்த நிலையில் ஆராதயா தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொடுமை நடப்பதை அறிந்து அதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறாள். இதனால் அவரை பள்ளி நிர்வாகத்தினர் கொலை செய்ய முயல்கின்றனர்.அவரை அர்ஜுன் பிரபாகரனால் காப்பாற்ற முடிந்ததா,பள்ளி நிர்வாகத்தில் மாணவிகளுக்கு நடந்த கொடுமை என்ன என்பதே மீதிக்கதை.
ராப் பாடகராக வரும் அர்ஜுன் பிரபாகரன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
ஆராதியா போராளி பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் முனீஸ்காந்த்,சுப்பிரமணியம் சிவா,சரவணசுப்பையா,காயத்ரி,ராஜலட்சுமி,திவ்யதர்ஷினி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜீவா அவர்களின் இசையும்,யுவராஜ் அவர்களின் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
ஒரு சில தனியார் பள்ளிகளில் நடக்கும் அராஜகத்தை கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் நாராயணன் பழணி அவர்களுக்கு பாராட்டுகள்.
பேட்டில் தரமான கல்வி தராத ஒரு சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கான சிறந்த பாடம்.
