பிரேக் பாஸ்ட் விமர்சனம்

நாயகன் ரானவ் ஒரு நன்கு படித்த நேர்மையான கிராமத்து இளைஞன். சரியான வேலை கிடைக்காமல் சாலை சுத்தம் செய்யும் பணியை செய்துவருகிறார். அவரை சந்திக்கும் பெரும் தொழிலதிபர் மகளான ரோஸ்மின்,அவருக்கு தன் நிறுவனத்தில் வேலை தருகிறாள். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. தந்தை சம்பத் ராஜ்ஜின் கடும் எதிர்ப்பையும் மீறி ரோஸ்மின் ரானவை மணந்து அவரை தனது நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராகவும் ஆக்குகிறாள்.ஆனால், திருமணத்திற்கு பிறகு ஈகோ மோதல்கள், ரானவ்வின் குடும்பத் தலையீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மங்கும் போது ஏற்படும் உணர்ச்சி இடைவெளியால் அந்த உறவு உடைய தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் பெற்ற குழந்தையை தாய் நிராகரிக்கும் அளவுக்குச் சிக்கல்கள் முற்றுகிறது.இந்த நிலையில் கிருத்திக் மோகன்,அமிதா ரங்கநாத் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.ஆனால் திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில் தொடர் சண்டைகள் ஏற்பட்டு,விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்கிறார்கள்.இறுதி தீர்ப்புக்கு முன்,நீதிபதி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறார்.அதன்படி அவர்கள் ஒரு மனநல ஆலோசகரை சந்திக்க வேண்டும். அந்த ஆலோசகராக வரும் கஸ்தூரி, அவர்களுக்கு மேலே குறிப்பிட்ட ரானவ்,ரோஸ்மின் கதையைக் கூறுகிறார்.இந்தக் கதையைக் கேட்கும் ரிஷப்,லட்சுமி தம்பதியினர்,தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை உணர்ந்தார்களா மீண்டும் இணைந்தார்களா ரானவ்,ரோஸ்மின் என்னவானார்கள்,அதோ போல் மனநல ஆலோசகர் கஸ்தூரி யார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பிக்பாஸ் ராணவ்,தனது முதல் படத்திலேயே மிகவும் அழுத்தமான மற்றும் சவாலான ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக பிரதிபலித்துள்ளார.
ரோஸ்மின் தனது நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டி ஸ்கோர் செய்துள்ளார்.
மற்றும்சம்பத்குமார்,கஸ்தூரி,அர்ச்சனா,கிருத்திக் மோகன்,அமிதா ரங்கந்த்,ரவி மரியா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும்,எம்.வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
இரண்டு வெவ்வேறு தம்பதிகள் கதையை ஒரே நேர்க்கோட்டில் இணைத்து அதற்கான சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுகள்.
பிரேக் பாஸ்ட் எல்லா மே பாஸ்ட்டாக நடந்து முடிந்து விடுகிறது.