நாயகன் ராகவ் விஞ்ஞான ரீதியாக விஷயங்களில் சிறந்த அறிவாளியாக இருக்கிறார்.ஒரு நிழல் படத்தை பார்த்து அதன் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து விடுவார்.இயற்கையிலேயே அப்படி ஒரு ஆற்றல் படைத்தவர்.அவருக்கு யாமினியின் நட்பு கிடைக்கிறது.அவருடன் ராகவ் நெருக்கமாக பழகிவருகிறார். ஒருநாள் அடுக்குமாடி குடியிறுப்பின் மூன்றாவது மாடியிலிருந்து திடிரென்று கீழே விழுந்து யாமினி இறந்து விடுகிறார். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற விசாரணையில் காவல்துறையினரும் ராகவும் துப்புதுலக்க களத்தில் இறங்குகிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
ராகவ் தனது கடின உழைப்பை வழங்கி சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் யாமினி லட்சுமணன்,பிரேர்னா கண்ணா,ஐடிஐ.ஆச்சார்யா, அருண் மோகன்,ஷ்ரவன் ராமகிருஷ்ணன்,ஜூஹி சர்மா,நிதிஷ்,பாலாஜி,ராஜவேல்,அதுல், ஜி.சிவகுமார்,வெங்கட் ரமேஷ்,கல் ஆர்.கணேசன்,எல்.சண்முகசுந்தர் ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
பிரதீப் பத்ம குமாரின் ஒளிப்பதிவும், பிரசாந்த் விஹாரியின் இசையும் கதைக்கு பலம்.
இப்படி ஒரு புலனாய்வுக்கதையை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் சண்முக சுந்தரம் அவர்களுக்கு பாராட்டுகள்.
“பீப்”வித்தியாசமான ரசிக்கும்படியான புலனாய்வு.
