பிளாக்மெயில் விமர்சனம்

ஜி.வி. பிரகாஷ் ஒரு மருந்து விநியோகஸ்தரான முத்துக்குமாரிடம் வேலை செய்கிறார்.முத்துக்குமார ரகசியமாக போதைப்பொருள் கடத்தல் தொழிலையும் நடத்துகிறார்.இந்நிலையில் ஒரு நாள்,ஜி.வி. பிரகாஷ் ஒரு மருந்தகத்தில் பணிபுரியும் தனது காதலி,தேஜு அஸ்வினி கர்ப்பமாக இருப்பதை அறிந்து காதலி கருக்கலைப்பு செய்ய விரும்பினாலும், அவளையும் குழந்தையும் கவனித்துக் கொள்ள இன்னும் கடினமாக உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறார். இந்நிலையில், மருந்து விநியோகஸ்தர் முத்துக்குமார் அவரிடம் ஒரு பார்சலை கொடுத்து குறிப்பிட்ட நபரிடம் டெலிவரி செய்யும்படி கூறுகிறார். சரக்கு வண்டியில் பார்சலை வைத்து விட்டு மருந்து கடையில் மருந்து பார்சல் டெலிவரி கொடுத்து விட்டு அப்படியே அங்கு வேலை பார்க்கும் காதலியிடம் பேசிவிட்டு வெளியே வந்து பார்க்கும் போது தான் ஓட்டி வந்த வாகனம் டெலிவரிக்கு கொடுக்க இருந்த பொருட்களுடன் காணாமல் போனது தெரிய வருகிறது.அப்போது அந்த பார்சலில் இருந்தது ஐம்பது லட்சம் மதிப்புள்ள போதை மருந்து என்று அவருக்கு தெரிய வருகிறது. கோபம் அடைந்த முதலாளி ஜி.வி. பிரகாஷ் காதலியை கடத்தி வைத்துக் கொண்டு,அவரிடம் 50 லட்சம் மதிப்புள்ள அந்த பார்சலை கொண்டு வந்து கொடு அல்லது அதற்கு சமமான பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டுகிறார். தனது நண்பர் ரமேஷ் திலக்குடன் பல வகையிலும் பணத்திற்கு முயற்சி செய்கிறார் ஜி.வி. பிரகாஷ்.இதற்கிடையில்,தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் அவரது மனைவியை அவரது முன்னாள் காதலன் லிங்கா அவருடன் இருக்கும் நெருக்கமான படங்களை வைத்து இரண்டு கோடிப் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறார். தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மனைவி மற்றும் மகள் அனு ஆகியோர் மலைபாதையில் போகும் போது, எதிர்பாராத ஒரு தகராறில் அவரது மகள் ஒரு அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்படுகிறார். தனது காதலியை காப்பாற்ற பணத்தை எப்படி புரட்டுவது என்று தெரியாமல் அலையும் ஜி.வி. பிரகாஷீம் அவரது நண்பன் ரமேஷ் திலக்கும் இந்த குழந்தை கடத்தல் விஷயத்தில் சிக்குகிறார்கள். ஆனால், அந்த குழந்தையை வேறு யாரோ கடத்த இப்படியாக அந்த சிறுமி ஒவ்வொரு சந்தர்ப்பச் சூழலில் மாறி மாறி கடத்தப்படுகிறார்.கடைசியில் குழந்தைக்கு என்ன ஆனது உண்மையான வில்லன் யார் ஜி.வி. பிரகாஷ் தன் காதலியை எப்படி காப்பாற்றினார் ஸ்ரீகாந்த் மனைவி முன்னாள் காதலன் மிரட்டலில் இருந்து எப்படி விடுபட்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜி.வி.பிரகாஷ் ஒரு மருத்துவக் கடையில் மருந்து பார்சல்களை விநியோகிக்கும் வேலையை பார்க்கும் மணி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
ஸ்ரீகாந்த்,பிந்து மாதவி,லிங்கா, தேஜூ, ரமேஷ் திலக், முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி,ஷாஜி,ஹரி பிரியா ஆகியோர் நேர்த்தியாக நடித்து கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவும்,சாம் சி.எஸ்.ஸின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இயக்குனர் மு மாறன், பணம் பறிப்பதற்காக குழந்தை கடத்தல் மற்றும் கதாநாயகன் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதை ஏராளமான எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய ஒரு அதிரடியான கதையை கொடுத்துள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
‘பிளாக்மெயில்’ Fast Mail.