அரோக்கோணம் அருகே உள்ள ஒரு சிறிய ஊரில் அசோக் செல்வன் தலைமையில் ஒரு கிரிக்கெட் அணியும் சாந்தனு தலைமையில் மற்றொரு கிரிக்கெட் அணியும் விளையாடி வருகின்றனர்.அவர்களுக்கு இடையே எப்போது பார்த்தாலும் போட்டி,நீண்டகால பாகுபாடு என வெவ்வேறு கோணத்தில் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர்.நீ பெரியவனா நான் பெரியவனா என எப்போதுமே முட்டி மோதிக்கொள்ளும் இந் நிலையில் இரு அணிகளுக்கும் பொது எதிர் அணியாக வந்து நிற்கிறது க்ளப்பிற்காக விளையாடும் கிரிக்கெட் அணி.க்ளப் அணியினரும் அந்த அணியின் பயிற்சியாளரும் அசோக் செல்வன் அணியினரையும் சாந்தனு அணியினரையும் அவமானபடுத்தி கீழ்த்தரமாக நடத்த,அந்த க்ளப் அணியை எதிர்த்து நின்று ஜெயிக்க இரு அணியினரும் ஒன்று சேர்கின்றனர். க்ளப் நடத்தும் டோர்னமெண்டில் ப்ளூ ஸ்டார் அணி கலந்துகொண்டு பயிற்சியும் பலமும் வாய்ந்த அணிகளுடன் போட்டி போடுகின்றனர்.பல போராட்டங்களையும் அவமானங்களையும் தாண்டி ப்ளூ ஸ்டார் அணி வெற்றி பெறுவதே கதை.
அசோக் செல்வன் மீசை இல்லாத முகத்தோடு கோபம் வேகம் விவேகம் உணர்வு என ஒரு கிரிக்கெட் கேப்டனுக்கு உண்டான அத்தனை பிரதிப்புகளையும் காட்டி தத்ரூபமாக தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிரணி கேப்டனாக சாந்தனுவும் தனது நடிப்பாற்றலை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
அசோக் செல்வனின் காதலியாக கீர்த்தி பாண்டியன் அற்புதமான அழகான எதார்த்தமான எளிமையான நடிப்பால் அனைவரையும் கவர்திருக்கிறார்.
அசோக் செல்வனின் தம்பியாக வரும் ப்ருத்வியின் நடிப்பு அருமை.குமரவேல், பக்ஸ்,என அனைவரும் பாராட்டை பெறுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகனுக்கு அவர்களின் ஒளிப்பதிவு அருமை வாழ்த்துகள்.கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.
மிகவும் நேர்த்தியான முறையில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் ஜெயக்குமாருக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை. அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
ப்ளூ ஸ்டார் அனைவரையும் சிக்சர் அடிக்க வைத்துள்ளது.
