
அனாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ்வளிக்கும் தொண்டு நிறுவனத்தை நடத்தி கிராமத்தில் சேவை செய்து வருகிறார் கிராமத்தில் மூலிகை வியாபாரம் செய்யும் டாக்டர் வீரபாபு.தனக்கு திருமணம் செய்ய நிச்சயித்த பெண் மஹானாவுடன் திருமணத்திற்கு துணி நகைகள் வாங்க சென்னை செல்கிறார். அங்கே மஹானாவின் அக்கா குழந்தை தொலைந்து போக வீரபாபு அக்குழந்தையை தேடிச்செல்லும் போது பல அதிர்ச்சியான உண்மைகளை கண்டுபிடிக்கிறார். குழந்தை கடத்தல் கும்பல் பெரிய பின்பலத்துடன் செயல்படுவதும், அந்த கும்பலின் தலைவன் ஆந்திராவில் இருப்பதையும் அறிந்து அவர்களை தேடி ஆந்திரா செல்லும் வீரபாபு சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன கடத்தல் கும்பலை கண்டுபிடித்தாரா குழந்தைகளை கடத்தும் நோக்கம் என்ன என்பதை கண்டுபிடித்தாரா பத்திரமாக குழந்தைகளை மீட்டாரா என்பதே படத்தின் கதை.
சித்த வைத்தியர் டாக்டர்.கே.வீரபாபு மூலிகை வைத்தியராகவே நடித்து படத்தை தயாரித்து இயகியுள்ளார் இவருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
படத்தின் நாயகியாக மஹானா எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார் போலீஸ் உயர் அதிகாரியாக சமுத்திரக்கனி, வில்லனாக சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, பாவா லட்சுமணன், முத்துக்காளை, வைஷ்ணவி, குழந்தை ஷாலினி ரமேஷ், தயாளன், சாம்ஸ், காதல் சுகுமார், ரமேஷ், இந்திரஜித் ஆகியோர் படத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அருள்செல்வனின் பணி படத்திற்கு பலம்.
சிற்பியின் இசையில் பழனிபாரதியில் பாடல் வரிகள் அருமை.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதையும் அனைவரும் பாற்க வேண்டிய படம் முடக்கறுத்தான்.
