சமுத்திரக்கனி கடற்கரை குடிசை பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்துவரும் இவர் தொழில் அதிபர் கௌதம் மேனனிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது இவரது கனவு.இந்த நிலையில் ஒரு சமயம் கௌதம் மேனன் வெளிநாடு செல்ல அவரது காரை தனது தேவைக்காக வாடகைக்காராக சமுத்திரக்கனி பயன்படுத்துகிறார்.ஒரு கட்டத்தில் கௌதம் மேனன் திரும்பி வர அவர் சமுத்திரக்கனி மீது என்ன நடவடிக்கை எடுத்தார் சமுத்திரக்கனி ஆசை எல்லாம் நிறைவேறியதா என்பதே படத்தின் மீதிக்கதை.
கார் ஓட்டுனர் செல்வமாக சமுத்திரக்கனி எதார்த்தமான கதாபாத்திரத்தை இயல்பாக செய்துள்ளார்.
சமுத்திரக்கனி மனைவியாக லட்சுமி பிரியா எதார்த்தமான கதாபாத்திரத்தில் ஒரு ஏழை பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மற்றும் கௌதம் மேனன்,கரன் சக்கரவர்த்தி,அபிநயா,படவா கோபி, கார்த்திக் குமார்,கோதண்டன்,மதுமிதா, அர்ஜுனன்,ஹரிதா பறக்கோட்,பேபி கே லயா ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சர்வீஸ் மியூசிக்கிளவுட் ஸ்டுடியோ அண்டு டெக்னாலஜியின் இசையும்,ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்க்ஷன் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
இப்படி ஒரு உணர்வுபூர்வமான கதையை சிறந்த காட்சிகள் மூலம் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் ராம் சக்ரி அவர்களுக்கு பாராட்டுகள்.
கார் மேனி செல்வம் கருணை நிறைந்தது.
