இந்திய ராணுவமும் ஈழப் போராளி இயக்கமும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட காலகட்டத்தில் 1988ஆம ஆண்டு ஒரு ஈழத் தமிழரின் வீட்டில் திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்ற வேளையில் வடகிழக்கு மாகாணமான யாழ்பாணத்தில் ஈழப்போராளிகளை தாக்குவதற்காக இந்திய ராணுவம்,போராளிகள் தங்கி இருப்பதாக நினைத்து ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைகிறார்கள்.ஆனால் அந்த வீட்டுக்குள் இருப்பவர்கள் அந்த வீட்டில் நடக்கவிருக்கும் திருமணத்துக்காக வந்திருந்த அப்பாவி மக்கள் என்பதும் திருமணம் நடக்க இந்திய ராணுவத்திடம் அனுமதியும் வாங்கியுள்ளார்கள் என்பதையும் வீட்டுக்குள் நுழைந்த இராணுவ தளபதி நவீன் சந்திரா தெரிந்து கொள்கிறார்.இந்த வீட்டில் போராளிகள் தங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் தவறுதாலாக வந்துவிட்டோம் என்று கூறி திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியேறும்போது,உள்ளேயிருக்கும் இராணுவத்தினரை தாக்க போராளிகள் அவ்வீட்டை முற்றுகையிட இப்போது இந்திய இராணுவம் அவ்வீட்டில் தஞ்சமடைகிறது. வீட்டுக்கு வெளியே ஈழப் போராளிகளின் முற்றுகையில் இந்திய இராணுவம் என்ன முடவு எடுத்தது.வீட்டுக்குள் திருமண நிகழ்வுக்காக வந்திருந்த அப்பாவி ஈழத்தமிழ் மக்கள் என்னவானார்கள்,போராளிகள் இராணுவத்தினரை தாக்கினார்களா என்பதே மீதிக்கதை.
ராணுவ தளபதியாக நடித்த்ருக்கும் நவீன் சந்திரா,மனித நேயமிக்க மனிதராகவும் அதே நேரத்தில் இராணுவ தளபதியின் கம்பீரத்தையும் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
ரூபா கொடுவாயூர் தனது மனவலியை தத்ரூபமாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றும் சோமநாத்,கபிலா வேணு,விது, சிதுகுமரேசன்,ரோஹித் கோகடே,சித்து குமரேசன்,நவயுகா,சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை,காயல் வின்சென்ட் ஆகியோர் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் கே யின் இசையும்,ஒளிப்பதிவாளர் செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
மூன்று நிகழ்வையும் ஒரே நேரத்தில் கையாண்டு ஈழ மக்களின் வலியை வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சோமிதரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“நீளிரா”இலங்கை ராணுவத்துக்கும் ஈழ விடுதலைப் போராளிகள் இயக்கத்துக்கும் இடையே நடக்கும் இனக்கலவரம்.
