
சீதக்காதி ‘அய்யா’விற்கு சிலை!
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இந்த அய்யா மெழுகுச்சிலையுடன் நின்று செல்ஃபி எடுத்து அனுப்பும் 100 பேருக்கு சீதக்காதி படத்தில் பிரீமியர் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யா ஆதிமூலம் 75 வயதுடைய நாடக நடிகர். சமகாலத்திய மொத்த நாடக நடிகர்களின் ஒரு உருவம் தான் ஆதிமூலம். தனி மனிதர்களுக்கு மெழுகுச்சிலை வைப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் எழுதி, உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்திற்கு மெழுகுச்சிலை வைப்பது இது தான் முதல் முறை. 2.0...