
படப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு !
ஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் பரபரப்பை கிளப்பிய நிலையில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோலகலமாக நேற்று (செப்டம்பர் 30) துவங்கியது.
இயக்குநர் சதீஷ் செல்வகுமார் படம் பற்றி பகிர்ந்து கொண்டது...
படத்தை பற்றிய நல்ல மனங்களின் வாழ்த்து பரவிய சூழலில் நேற்று கொண்டாட்டத்துடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். படத்தின் முக்கிய பகுதிகளை இங்கு படமாக்கிவிட்டு மேலும் சில பகுதிகளை கோயம்புத்தூரில் தொடர உள்ளோம். ஆரம்பம் முதலே படத்தின் மீது நடிகர் ஜீ வி பிரகாஷ் கொண்டிருக்கும் ஆர்வம் பெரும் உற்சாகத்தை தருகிறது. அவராகவே மீண்டும் மீண்டும் பல டேக்குகளை கேட்டு நடிக்கிறார். நாங்கள் திருப்தியடைந்த போதிலும் அவர் டேக்குகள் கேட்டு நடிக்க...