ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!
*ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!*
அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ் ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படமான டபுள் ஆக்குபன்சி, வரும் ஜூன் 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், படம் உருவான விதம் மற்றும் வெளியீட்டை நோக்கிய அதன் சுவாரஸ்யமான பயணம் குறித்த பல தகவல்களைப் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள இப்படத்தில், சந்தோஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் சம்யுக்தா விஸ்வநாதன், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்...









