பரத்பாலா இயக்கத்தில் “அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் உருவானது.
பரத்பாலா இயக்கத்தில் "அறிதுயில்"
குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் உருவானது.
தமிழகத்தில் தசரா திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அதிலும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா என்பது உலகளவில் பிரபலம். ஏனென்றால் பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள்.
இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பரத்பாலா. 'அறிதுயில்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை ஒரு கதையாகவே இதில் சொல்லியிருக்கிறார்கள்.
தசராவுக்கு முந்தைய இரவு, பண்டையகால பெண் கடவுளான சக்தி, எல்லா இருள்களையும் அழிக்கும் இரவு. தமிழ்நாட்டில் உள்ள இந்த கடற்கரை கிராமத்தில் இந்த நாளில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடுகின்றனர். அவர்கள் தங்கள் வலியை கொண்டு வருகின்ற...









