இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..!
*இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..!*
*பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'தேசிய தலைவர்’..!*
*பசும்பொன் தேவர் வரலாறை படமாக இயக்கும் ஊமை விழிகள் இயக்குனர்..!*
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.
தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் இந்தப்படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் இணைந்து ப...








