“கபடி வீரன்” பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு!
ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் "அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்" பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் "கபடி வீரன்". இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை , சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது, ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர் தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர் ,அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ் , ராதாரவி, ஜாகுவார் தங்கம் , நமீதா , 'பவர் ஸ்டார்' சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் ... உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திரைக்கதை மன்னன் இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் , நான் இப்பொழு...









