சுரேஷ் சந்திரமேனனின் ‘மை கர்மா’!
இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறா. அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார்.
அவர் பேசும்போது, "என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமெண்டரிகள் எடுத்திருக்கிறேன். தற்போது லூசிஃபர், அடங்க மறு, காளிதாஸ், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன்.
நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களை செய்ல்படுத்துவதில் ஆர்வம் உண்டு. மக்கள் பயன்பெறும் நிறைய திட்டங்களை வடிவமைத்து தந்திருக்கிறேன். கண்டெய்னர் மூலம் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறேன். சென்னை காவல்துறைக்கு பல ட்ராஃபிக் கண்ட...









