News

தளபதி விஜய் நடிப்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  ‘தளபதி 64’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

News
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .தற்போது நான்காவது முறையாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத் கத்தி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தளபதி விஜயுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை கவனிக்கிறார் . இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் . தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சம்ம...
சித்தார்த் நடிப்பில் “அருவம்”

சித்தார்த் நடிப்பில் “அருவம்”

News
Trident Arts ரவீந்திரன் வழங்கும் சித்தார்த் நடிக்கும் “அருவம்”. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல்  ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ளது “அருவம்”. எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் பேசிய ... ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியது ... சித்தார்த்துடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவருடன் நடிப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. எப்போதும் படங்களில் காதலிக்கும் பையானாக இருப்பார். இந்தப்படத்தில் ஒரு மிடுக்கான ஆண்மகனாக நடித்துள்ளார். காத்ரீன் என் மேல் கோபமாக இருப்பார் ஏனெனில் அவரை கயிறு கட்டி நிறையகாட்சிகளில் தூக்கி, தொங்க விட்டு சண்டைக்காட்சிகள்...
தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

தளபதி 64 -ல் இணைந்த நடிகை மாளவிகா மோகனன்!

News
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜயை வைத்து செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நான்காவது முறையாக XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார் . இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு  ஆகியோர் நடிக்கின்றனர் . தற்போது நடிகை மாளவிகா மோகனன் தளபதி 64 படத்தில் இணைந்து நடிக்கிறார் . இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் படமான 'பியாண்ட் தி கிலவுட்ஸ்' மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மெகாஹிட் படமான பேட்ட ஆகிய படங்களில் நடித்துள்ளார் . மேலும் தெலுங்கில் விஜய் தேவரக...
கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

News
மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவம்சி'. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.. இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. நேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்...
தளபதி 64 இல் இணைந்த மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்

தளபதி 64 இல் இணைந்த மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்

News
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜயை வைத்து செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நான்காவது முறையாக XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை   மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார் . இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக தளபதி  விஜயுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இந்நிலையில்  இப்படத்தில் இளம் முன்னணி மலையாள  நடிகரான ஆண்டனி வர்கீஸ் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் 2017 இல் மலையாளத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான  அங்கமாலி டைரீஸ் என்கிற படத்தில் நாயகனாக அறிமுகமானார்  என்பது குறிப்பி...
படப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு !

படப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு !

News
ஜீ வி பிரகாஷ் குமார்  நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் பரபரப்பை கிளப்பிய நிலையில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோலகலமாக நேற்று (செப்டம்பர் 30) துவங்கியது. இயக்குநர் சதீஷ் செல்வகுமார் படம் பற்றி பகிர்ந்து கொண்டது... படத்தை பற்றிய நல்ல மனங்களின் வாழ்த்து பரவிய சூழலில் நேற்று கொண்டாட்டத்துடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். படத்தின் முக்கிய பகுதிகளை இங்கு படமாக்கிவிட்டு மேலும் சில பகுதிகளை கோயம்புத்தூரில் தொடர உள்ளோம். ஆரம்பம் முதலே படத்தின் மீது நடிகர் ஜீ வி பிரகாஷ் கொண்டிருக்கும் ஆர்வம் பெரும் உற்சாகத்தை தருகிறது. அவராகவே மீண்டும் மீண்டும் பல டேக்குகளை கேட்டு நடிக்கிறார். நாங்கள் திருப்தியடைந்த போதிலும் அவர் டேக்குகள் கேட்டு நடிக்க...
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் “சரவண சக்தி”

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் “சரவண சக்தி”

News
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள்  மணிவண்ணன்,மனோபாலா, சிங்கம்புலி என நிறையபேர் இருக்கிறார்கள்.  அந்த வரிசையில் இப்போது  இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அந்த படம் இவருக்கு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் அது மட்டும் இல்லாமல் நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு   சசிகுமாரின் நடிப்பில்  வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  அதைத் தொடர்ந்து மருது,சண்டக்கோழி 2 ,க...
படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அருண் விஜய்

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அருண் விஜய்

News
நடிகர் அருண் விஜய் அவர்களின் திரைவாழ்க்கை என்பது வெற்றிக் கனிகளும், காயங்களும் இரண்டறக் கலந்ததுதான். திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது ஏற்படும் காயங்களை, வெற்றிப் படிகளில் ஏறக்கிடைக்கும் வாய்ப்பாக  அவர்  தன்னுள் அடைகாத்துக்கொள்கிறார் என்பதுதான் நிதர்சனம். ஜி,என்.ஆர்.குமாரவேலன்  இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் புதிய படமொன்றின் சண்டைக்காட்சியில் மீண்டும் ஒரு விழுப்புண் அவர் உடலில் ஏறியிருக்கிறது. ஆம். சண்டைக்காட்சியில் மீண்டும் காயமடைந்திருக்கிறார் அருண் விஜய். இது குறித்து புன்னகையுடன் அருண் விஜய் கூறியதாவது... "எதிர்பாராத முறையில் ஏற்பட்ட இந்தக் காயம், நடிகர் என்ற முறையில் என் திரைவாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். கண்ணாடி பாட்டில் ஒன்றை நான் உடைப்பது போன்ற காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா அமைத்திருந்தார். சுகர் கிளாஸ் எனப்படும் ஒருவகைக் கண்ணாடியைத்தான...
சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”

சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”

News
இந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அக்டோபர் 2, 2019 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. படக்குழுவுடன் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தமிழில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் உரிமையை பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ளது. இவ்விழாவில் R B சௌத்திரி  பேசியது.... மிகப்பெரிய பட்ஜெட் படத்தை பிரமாண்ட செட் போட்டு எடுப்பார்கள் ஆனால் இப்படத்தில் இந்தியாவின் பிரமாண்ட நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார்கள். பாலிவ...