News

நடித்தர வர்க்க இளைஞரின் வாழ்கை பிரதிபலிப்பு – தோழர் வெங்கடேசன்

நடித்தர வர்க்க இளைஞரின் வாழ்கை பிரதிபலிப்பு – தோழர் வெங்கடேசன்

News
இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன் காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன். இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை ...
அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா

அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா

News
சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது. இயக்குநர் கெளதம் 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்க பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். இதிலுள்ள காதல் ட்ராக் புதிதாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எ...
அதிரடி ஆக்‌ஷனில் சுட்டுப்பிடிக்க உத்தரவு!

அதிரடி ஆக்‌ஷனில் சுட்டுப்பிடிக்க உத்தரவு!

News
Instagramன் அழகான இளவரசி, அவரது பேரழகான தோற்றத்துக்காக ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவரை வழக்கமான ஒரு நடிகையாக வைத்திருக்கவில்லை. அவர் எப்போதும் உற்சாகமாக, தனித்துவமான கதாபாத்திரங்களை பரிசோதிக்கும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். சுட்டு பிடிக்க உத்தரவு அதுல்யா ரவியின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வைத்த திரைப்படம் என உறுதியாக கூறுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, "ஆம், என்னுடைய பகுதி என்று வரும்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு முற்றிலும் புதுமையானது. இந்த படத்தில் வழக்கமான கமெர்சியல் அம்சங்கள், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் இல்லை. கோயம்புத்தூர் சேரிகளில் வாழும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்" என்றார். படத்தைப் பற்றி மேலும் ...
முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது  மகன் சூர்யாஇணைந்து நடித்துள்ள   “ சிந்துபாத் “

முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது  மகன் சூர்யாஇணைந்து நடித்துள்ள   “ சிந்துபாத் “

News
கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “ இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா     ஆகியயோர் நடித்துள்ளனர். இசை  - யுவன்சங்கர் ராஜா ஒளிப்பதிவு  -  விஜய் கார்த்திக் கண்ணன் எடிட்டிங்  -  ரூபன் கலை – A.R,மோகன் பாடல்கள் – விவேக், விக்னேஷ்சிவன், பா,விஜய், கார்த்திக் நேத்தா. ஸ்டன்ட்  – பிரதித் சீலம், ஹரி தினேஷ் நடனம்  -  ஷெரிப் மக்கள் தொடர்பு  - மௌனம்ரவி தயாரிப்பு - கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் சான்சுதர்ஷன். கிளாப்போர்டு புரொடக்ஷன் சத்யமூர்த்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S U.அரு...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

News
தணிக்கை குழு உறுப்பினர்கள் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. நடிகர்கள் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாராவி மற்றும் நாஞ்சில் சம்பத் , அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோர் முற்றிலும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குனருக்கு, இது கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது போல உள்ளது. குழுவில் உள்ள  ஒவ்வொருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இயற்கையாகவே, நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜாவை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இரும்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்ப...
குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!!

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!!

News
குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது, "இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்...
ஒத்த செருப்பு இசை வெளியீட்டு விழா!

ஒத்த செருப்பு இசை வெளியீட்டு விழா!

News
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவிலும் படங்களை கொடுப்பது சாத்தியம் என்பதை நிரூபித்த இயக்குனர் ஷங்கர், திரைக்கதை வித்தகரும், பார்த்திபனின் குருநாதருமான பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த...
ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு

ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு

News
  எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை  ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.  இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலால...
தமிழர்கள் எங்கு சென்றாலும் திறமையால் ஜெயிப்பார்கள் : கஸ்தூரி பேச்சு!

தமிழர்கள் எங்கு சென்றாலும் திறமையால் ஜெயிப்பார்கள் : கஸ்தூரி பேச்சு!

News
'அகோரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இவ்விழாவில் இயக்குநர் இயக்கிய பாக்யராஜ் ,நடிகை கஸ்தூரி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர் மைம் கோபி, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி. ஜி. முத்தையா, தயாரிப்பாளர் பி டி செல்வகுமார், படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான ஆர் பி பாலா, இணை தயாரிப்பாளர் சுரேஷ் கே மேனன், இயக்குநர் D.S.ராஜ்குமார் , ஒளிப்பதிவாளர் வசந்த், நடிகர்கள் சித்து, வெற்றி, கார்த்திக், ஷரத், விளம்பர வடிவமைப்பாளர் பவன் மற்றும் சண்டை பய...
பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார். ‘மான்ஸ்டர்’ – எஸ்.ஜே.சூர்யா.

பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார். ‘மான்ஸ்டர்’ – எஸ்.ஜே.சூர்யா.

News
வசனகர்த்தா ஷங்கர் பேசும்போது, இப்படத்தில், எழுத்தில் நான் இருந்திருக்கிறேன். பாடலாசிரியர் மற்றும் எழுத்து இரண்டிலும் என் பெயர் வந்ததற்கு நன்றி. இப்படம் எனக்கு இரண்டாவது படம். நெல்சன் என்னுடைய மாணவனாக இருந்தாலும் அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நெல்சன் இயக்கத்தில் கதாநாயகி பாதுகாப்பாக இருப்பார்கள். கதையை எப்படி அழகுப்படுத்துவதை எஸ்.ஜே.சூர்யாவிடம் கற்றுக் கொண்டேன். அனைவரிடமும் ஆலோசனை கேட்பார். தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்று பிரபாகரனிடம் தெரிந்துக் கொண்டேன் என்றார். நடன இயக்குநர் சாபு ஜோசப் பேசும்போது, ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் பணியாற்றிய குழுவுடன் இப்படத்திலும் பணியாற்றினோம். எலியை வைத்து கதையை கூறும்போது ஆர்வமாக இருந்தது. எலி மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து வரும் காட்சிகளில் தொழில்நுட்பத்தில் சவாலாக இருந்தது. இந்த காட்சிகள் நன்றாக வருவதற்கு அனைவரின் ஆலோசனையும்...