பாராட்டுக்களை குவித்து வருகிறது, நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” !


பாராட்டுக்களை குவித்து வருகிறது, நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” !

நடிகர் ஆதி நடிப்பில் சமீபத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்” திரைப்படம், அனைத்து தரப்பினரிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. நடிகர் ஆதியின் அழுத்தமிகு முதிர்ச்சியான நடிப்பு சிறப்பான வகையில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

ஒரு ஓட்டப்பந்தய வீரனின் கனவு அவன் கண்முண் நொறுங்கிப்போக, அதை தாண்டி ஒரு சிறு பெண்ணை, தடைகளை கடந்து, பயிற்சி தந்து சாம்பியனாக்கி காட்டும் வீரனின் கதை தான் இந்த #கிளாப் திரைப்படம்.
ஓட்டப்பந்தய வீரனாக தோல்வி முகம், குடும்பஸ்தன், தடைகளை கடக்கும் பயிற்சியாளன் என பல முகங்களை ஒரே படத்தில் அழுத்தமாக பதிவு செய்து நடிகனாக தன் தனித்திறமையை நீருபித்திருக்கிறார் நடிகர் ஆதி.

இளையராஜாவின் இசை, அழகான திரைக்கதை என இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து படம் பார்க்க ஆசைப்பட்ட தன் திரைத்துறை நண்பர்கள் மற்றும் நட்சத்திரங்களுக்காக தனியாக ஒரு சிறப்பு காட்சியை நாயகன் ஆதி செய்திருந்தார். இந்த சிறப்பு காட்சியில் பிரபல டைரக்டரும் ஆதியின் தந்தையான ரவிராஜா பினிசெட்டி, நடிகர் ஆர்யா,கர்ணாஸ், நிக்கி கல்ராணி, ஶ்ரீநாத், பிரிதிவிராஜன், டைரக்டர் வெங்கட் பிரபு, சுசீந்திரன், கணேஷ் வினாயகம்,
R.பாண்டியராஜன், நிதின் சத்யா, நரேன்,ஆனந்தராஜ், மைம் கோபி, ஹரிஷ் உத்தமன், எம்.எஸ்.பாஸ்கர், #மரகதநாணயம் டைரக்டர் சரவணன், தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், டில்லி பாபு, எடிட்டர் கே.எல்.பிரவின் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

படம் பார்த்த அனைவரும் படத்தையும் ஆதியின் நடிப்பையும் வெகுவாக புகழ்ந்து பாராட்டினர்.

இயக்குநர் பிருத்வி ஆதித்யா இயக்கியுள்ள இப்படத்தை Big Print Pictures சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.