“டிசி” விமர்சனம்

கதா நாயகனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு போராளிக் கூட்டத்திற்கு தலைவராக இருக்கிறார்.
காவல்த்க்துறையினரின் அட்டூழியங்களை எதிர்த்து போராடுகிறார்.சாலையில் ஒரு ஏழை தம்பதிகள் நடந்து வருகிறார்கள். அவர்கள் தனது ஒரே மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்க்காக தங்களது சொத்துக்களை விற்று ரூ.7 லட்சத்துடன் அந்த சாலையில் நடந்து வருகிறார்கள்.இதை தெரிந்து கொண்ட காவலர்கள் அந்த பணத்தை அந்த ஏழையிடமிருந்து பறிமுதல் செய்கிறார்கள். பணத்தை கொடுக்க மறுத்த அந்த ஏழை தம்பதிகளை காவலர்கள் சுட்டுக் கொள்கிறார்கள்.இதையடுத்து அந்த ஏழை சிறுவனை படிக்கவைக்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் சபதம் ஏற்கிறார். காவல்த்துறையினருடன் போராடும் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக கதாநாயகனாக புதிய பரிமாணம் எடுத்து அசாத்தியமான நடிப்பை வழங்கியுள்ளார்.
வாமிகா கபி சிறப்பாக நடித்து அசத்தி இருக்கிறார்.
மற்றும் கிரிஷ் தயால்,தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா,அவினாஷ் ரகுதேவன் என அனைவருமே எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
முகேசின் ஒளிப்பதிவும்,அனிருத் இசையும் கதைக்கு பெரிய பலம்.
இப்படி ஒரு வித்தியாசமான கதை களத்தை உருவாக்கி அதற்கான சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“டி.சி” விறுவிறுப்பு.